திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
திருவிளக்கு பூஜை
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com