search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police raid"

    • விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.

    விக்கிரவாண்டி:

    இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.

    அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.

    மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

    இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது. 

    • தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    • ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் குற்ற சம்பவங்களை தடுக்க புதுவை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரவுடிகள் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்படுள்ளன.

    இதற்கிடையே புதுவை மாநிலத்தையொட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் புதுவையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக புதுவை போலீசாருக்கு தகவல் வந்தது.

    மேலும் ஊருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட ரவுடிகளும் அவரவர் வீடுகளில் பதுங்கியிருப்பதாக புதுவை போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து புதுவையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக எல்லையையொட்டி புதுவை பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுபற்றி புதுவை போலீசார் தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். ரவுடிகளின் வீடுகளில் போலீசாரின் அதிரடி சோதனையால் அவர்களது குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சா கார்த்திக். அஸ்தம்பட்டி அருகே, ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி. பிரபல ரவுடிகளான இருவரும், குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கீர்த்தி ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து அவரது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு, தாதகாப்பட்டி கேட், ஆஞ்சநேயர் கோவில் அருகே வைத்து பிச்சா கார்த்தியை தாக்கினார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க ஜீவானந்தம் என்பவர் வந்தபோது, போலீசார் வாகன சோதனையில் அவர் பிடிபட்டார்.

    விசாரணையில், ராமு என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி, செயின் பறித்த வழக்கில் ஜீவானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த கீர்த்தி, பரத், மணி, கவியரசு ஆகியோர் மீது சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

    இதில் ஜீவானந்தத்தை தலைமறைவாக உள்ள 4 ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக நடந்தது
    • மெட்டல் டிெடக்டருடன் தீவிர கண்காணிப்பு

    அரக்கோணம்:

    கர்நாடகாவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்கள், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், பிளாட்பாரம் மற்றும் ரெயில் நிலைய வளாகம் வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் மெட்டல் டிடக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    • வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்- ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் உள்ளே புகுந்து அலுவலக கதவினை உட்புறமாக தாழிட்டு கொண்டு சோதனை செய்தனர். அப்போது பணியிலிருந்த துணை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 11மணி வரையிலும் நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து டிஎஸ்பி சத்தியராஜ் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையால் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
    • மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்காலில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்ப படித்து வந்தார். படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.

    இதில் மயங்கி விழுந்த பால மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் சகாய மேரி விக்டோரியாவை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு எலி மருந்து ஏேதனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைகளில் நிறுத்தி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சுதந்திர தினத்தை யொட்டி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், மார்க்கெட், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைகளில் நிறுத்தி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லையப்பர் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் கோவில், நாங்குநேரி, களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டும், மோப்ப நாய் மூலமும் சோதனை செய்யப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த பணியை ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலமாக ரெயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீ சார் அனைத்து தண்டவாளங்க ளிலும் சோதனை நடத்தினர்.மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார் நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் அனைத்து போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த பாதுகாப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) இரவு தொடங்கி 16-ந் தேதி காலை வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றியும், கலை நிகழ்ச்சிகள் இல்லாமலும் சுதந்திர தின விழா நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்து விட்டதால் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி கடந்த 2 நாட்களாக போலீசார், என்.சி.சி. மாணவர்கள் ஆகியோரை கொண்டு நிகழ்ச்சிக்கான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இன்று பயிற்சி போலீசார் பங்கேற்ற ஒத்திகை நடைபெற்றது.

    இந்த ஆண்டு மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி, தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    மேலும் மாவட்டம் மற்றும் மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    சுதந்திர தினத்தன்று காலை 9.5 மணிக்கு கலெக்டர் விஷ்ணு தலைமையில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் போலீசார் செய்து வருகின்றனர்.

    • அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள ஒரு மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்கு கூடுதலாக மது விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அந்த மதுபான கூடத்தில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    இதில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் மோசடி வழக்கில் சிக்கியவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பிரதான சாலையில் வசித்து வருபவர் நீதிமணி. இவர் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது .

    இந்த நிலையில் கிச்சிப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜ்குமார் தலைமையில் போலீசார் வந்தனர். தொடர்ந்து வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாக அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இந்த அதிரடி சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் நடந்த இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    குளச்சல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களை திருடிய பட்டதாரி வாலிபர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    குளச்சல்:

    குளச்சல் பகுதியில் இரவு வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோயின. சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதிதெரு ரமே‌ஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது.

    இது குறித்து அவர்கள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குளச்சல் போலீசார் இரும்பிலி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் உதயமார்த்தாண்டத்தைச் சேர்ந்த மரிய கிராஸ்வின் (20), லியோன் நகரைச் சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரையைச் சேர்ந்த முகம்மது அனஸ் (22) , அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் 4 பேரும் குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆலஞ்சி குன்னங்கல் பாறைக்கு கொண்டு சென்று அவர்கள் பழைய நம்பர் பிளேட்டுகளை கழற்றி விட்டு போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். இவர்கள் குளச்சல் மட்டுமல்லாமல் தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், கோட்டார் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதானவர்களில் முகம்மது அனஸ் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

    ×