பண்ருட்டி அருகே பட்ட பகலில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொள்ளை நடந்த விவசாயி வீட்டில் பீரோ திறக்கப்பட்டிருக்கும் காட்சி.
கொள்ளை நடந்த விவசாயி வீட்டில் பீரோ திறக்கப்பட்டிருக்கும் காட்சி.
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் பாட்டை தெருவை சேர்ந்தவர் குமார் (வயது46). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணிக்கு தனது வீட்டை பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்கு வேலை சென்றார். வேலைமுடிந்து மதியம் 12.30மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்பி ன்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த பீரோஉடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள் பிரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ20,000 பணம் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விவசாயி குமார் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com