search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் திடீர் சோதனை"

    • குறிப்பாக பருப்பு வகைகள் மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதில் துவரம் பருப்பு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.
    • கடைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் துவரம் பருப்பை பதுக்கி வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த 2 மாதமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக பருப்பு வகைகள் மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதில் துவரம் பருப்பு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.

    இதனால் துவரம் பருப்பு பதுக்கி வைக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மொத்த கடைகள் மற்றும் டீலர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் நகரில் 4 மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர்.

    கடைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் துவரம் பருப்பை பதுக்கி வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக நடந்தது
    • மெட்டல் டிெடக்டருடன் தீவிர கண்காணிப்பு

    அரக்கோணம்:

    கர்நாடகாவில் நிகழ்ந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே போலீஸ் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்கள், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள், பிளாட்பாரம் மற்றும் ரெயில் நிலைய வளாகம் வழியாக வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் மெட்டல் டிடக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்- ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் உள்ளே புகுந்து அலுவலக கதவினை உட்புறமாக தாழிட்டு கொண்டு சோதனை செய்தனர். அப்போது பணியிலிருந்த துணை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 11மணி வரையிலும் நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து டிஎஸ்பி சத்தியராஜ் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையால் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

    ×