search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposition meeting"

    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது.
    • இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    பாட்னா:

    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டார்.
    • கடந்த 2 மாதமாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.

    புவனேஷ்வர்:

    பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், எமர்ஜென்சியின்போது பாட்டி இந்திரா காந்தியால் சிறைக்குச் சென்றவர்கள் தற்போது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர்.

    ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவ தலைவர்களாக செயல்பட்ட நிதிச்ஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்திரா காந்தி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது லாலு பிரசாத் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் இருந்தனர்.

    எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதைப் பார்த்தேன். அவரது தந்தை, இந்து ஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரசை எதிர்த்தார். பாலாசாகேப் ஒருமுறை காங்கிரசில் சேர்வதற்குப் பதிலாக துகானை (தனது அரசியல் கட்சியான சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடுவதாகக் கூறியிருந்தார். இப்போது, அவரது மகன் துகானை மூடுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியை உலக தலைவர்கள் பாராட்டியதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கும் மோடி, நாட்டில் வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தற்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.
    • கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாட்னா:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மேற்கொண்டார்.

    தொடக்கத்திலேயே அவரது முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தற்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். அப்போது ஜூன் 23-ந்தேதி (இன்று) பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஒன்றிணைந்து எதிர்க்க ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சந்திரசேகரராவ், நவீன் பட்நாயக், குமாரசாமி, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, ஓவைசி போன்றவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் அமைதி, ஒற்றுமைக்கான வேலைகளை செய்கிறோம்
    • அவர்கள் (பா.ஜனதா) பிரிவினைக்கான வேலைகளை செய்கிறார்கள்

    பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதாவை எதிர்க்கும் 20 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அவர்கள் பாட்னா வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாட்னா வந்தடைந்தார். அவர் காங்கிரஸ் அலுவலகம் சென்று கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ''இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது இரு சித்தாந்தத்திற்கு இடையிலான போர்.

    ஒரு பக்கம் காங்கிரசின் ஒற்றுமை சித்தாந்தம். மறுபக்கம் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரிவினை சித்தாந்தம். வெறுப்புணர்ச்சியை அன்பால்தான் வெல்ல முடியும், வெறுப்பால் வெல்ல முடியாது.

    பா.ஜனதா வன்முறை, வெறுப்பை பரப்புதல், நாட்டை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் அமைதி, ஒற்றுமைக்காக வேலை செய்து வருகிறோம். இங்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வந்துள்ளனர். ஒன்றிணைந்து பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

    கர்நாடகாவில் வெற்றி பெற்றதுபோல் தெலுங்கானா, சத்திஸ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ஜனதா எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் மாற்றத்தை பார்ப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் ஏழை மக்கள் பக்கம் நிற்கிறோம். பா.ஜனதா என்றால் 2 அல்லது 3 பேருக்கு ஆதாயம் கிடைப்பது'' என்றார்.

    மல்லிகார்ஜுனா கார்கே ''நாங்கள் பீகாரில் வென்றால், அதன்பின் நாடு முழுவதும் வெல்ல முடியும்.'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்
    • பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியுமா? இந்த வேலையை செய்வது யார்? என்பது மில்லியன் கேள்வி. அப்படி ஒருங்கிணைத்தாலும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பில்லியன் கேள்வி.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்ககும் முதற்படியாக நிதிஷ் குமார் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். 18-க்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்கள் புறப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி., ரவி சங்கர் பிரசாத் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை கிண்டல் செய்துள்ளார்.

    ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து கூறும்போது ''நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார். ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்). ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள்'' என்றார்.

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து டிசம்பர் 10-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. #ParlimentWinterSession #OppositionParties
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்தது. அதில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது எனவும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்தது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக எதிர்கட்சிகள் டிசம்பர் 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentWinterSession #OppositionParties
    ×