search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Rummy"

    • வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது
    • சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என தகவல்

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய சட்டம் இயற்றவேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், வரும் 17ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    • மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    திருச்சி மணப்பாறையை சேர்ந்த இளைஞர் சந்தோஷ். 23 வயதாக இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகியதாக தெரிகிறது. இந்த விளையாட்டின் மூலம் அதிகளவில் பணத்தையும் இழந்துள்ளார்.

    இதனால் மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    தான் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு எடுத்தததை அடுத்து, சந்தோஷ் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், " என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
    • அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சென்னை:

    5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதாவிற்கு நல்ல முடிவு வரும்.

    துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது.
    • பணத்தை இழந்த கல்லூரி மாணவர் மனவேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 20). இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அதை அறிந்த அவரது பெற்றோர், மாணவரை ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இதுபற்றி ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் விளம்பரத்தை கட்டுபடுத்துவது அரசுதான்
    • குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். ஆனால் குடிக்காமல் இருக்கிறார்களா?

    திருச்சி:

    திருச்சியில் சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்படும் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் நடிப்பது குறித்து சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து சரத்குமார் கூறியதாவது:-

    ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை முதலில் அரசிடம் கேளுங்கள். சரத்குமார் நடிப்பது பற்றி இரண்டாவது கேளுங்கள்.

    ஆன்லைன் ரம்மியை நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் இப்போது சொல்கின்றன. ஆனால், ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் சூதாட்டம் பல விதத்தில் மக்களுக்கு பாதிப்பு என முதலில் இருந்தே கூறி வருகிறோம்.

    ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் விளம்பரத்தை கட்டுபடுத்துவது அரசுதான். எனவே, அரசு முடிவு எடுத்து ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்ட ஒன்று என சொன்னால், தடை செய்ததை நான் எப்படி பயன்படுத்துவேன்? தடை செய்த ஒன்றுக்கு நான் எப்படி விளம்பரப்படுத்துவேன். நீங்கள் (அரசு) தடையே செய்யவில்லையே. நீங்கள் தடை செய்யுங்கள், அது தானாக நிறுத்தப்படும். சரத்குமார்தான் எல்லாரையும் கெடுக்கிறார் என்று எப்படி சொல்வீர்கள்?

    ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவார்கள்.

    குடிப்பழக்கம் குடியை கெடுக்கும். ஆனால் குடிக்காமல் இருக்கிறார்களா? குடிக்காதீர்கள் என நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். இதேபோல் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு. ஆனால் தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை?

    எனவே உலகத்தில் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப்பார்த்து கெட்டுப்போகாதீர்கள், மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நல்லவையும் இருக்கின்றன, தீயவையும் இருக்கின்றன. நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறோம். நாம் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்தானது என்பதால் அதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
    • ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கோட்டையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்துக்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மீது விவாதித்து முடிவெடுக்க உள்ளனர்.

    குறிப்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 27-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டிருந்தது.

    608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன நோய் இருந்தது? அவருக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது? வெளிநாட்டுக்கு அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது ஏன்? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது.

    ஜெயலலிதாவின் மரணத்தில் 'மர்மம்' இருப்பதாக கூறி வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம், சசிகலாவின் வாக்குமூலம், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இந்த அறிக்கையை சட்டசபை கூடும்போது வெளியிடலாமா? அல்லது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உடனே வெளியிடலாமா? என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதுவும் இன்னும் மக்கள் பார்வைக்கு வெளியிடாமல் உள்ளது.

    இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதால் சட்டசபையை எப்போது கூட்டலாம் என்பது பற்றியும் இதில் விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான சூழல் குறித்தும் இதில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூலை 27-ந்தேதி தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆய்வு கூட்டங்கள் நடத்தி விவாதித்துள்ள நிலையில் இப்போது அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    இது தவிர பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது பற்றி இன்று இரவு அறிவிப்பாக வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தல்
    • சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது.

    இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    • ஜெகதீஷ் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்தது போல கணக்கு காட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியும், சில தங்க நகைகளை மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.
    • கடந்த சில மாதங்களாக போலியாக பதிவேடு தயாரித்துள்ளார். கம்ப்யூட்டர் பதிவுகளிலும் இவர் திருத்தம் செய்து தங்க கட்டி கணக்குகளை மோசடி காட்டி வந்ததாகவும் தெரிகிறது.

    கோவை:

    கோவை சலீவன் வீதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் மேலாளராக கார்த்திகேயன் (வயது37) என்பவர் உள்ளார். இங்கு வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்(34) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் நகை கடைக்கு வரும் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்து ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணித்து வந்தார். மேலும் தங்கம் வடிவமைப்பு தர முத்திரை போன்ற பணிகளையும் கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெகதீஷ் தங்க கட்டிகளை பட்டறைகளுக்கு கொடுத்தது போல கணக்கு காட்டியும், பழுதான தங்க நகைகள் என கணக்கு காட்டியும், சில தங்க நகைகளை மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த சில மாதங்களாக இவர் போலியாக பதிவேடு தயாரித்துள்ளார். கம்ப்யூட்டர் பதிவுகளிலும் இவர் திருத்தம் செய்து தங்க கட்டி கணக்குகளை மோசடி காட்டி வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நகைக்கடையின் மேலாளர் கார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்பு கடையின் கணக்குகளை சரி பார்த்தார்.

    அப்போது ஜெகதீஷ் போலியாக கணக்கு காட்டி ரூ.55 லட்சம் மதிப்பிலான 1,467 கிராம் எடையிலான தங்கத்தை அபகரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெகதீஷ் மீது வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீஷ் ஆன்லைனில் ரம்மி விளையாட தொடங்கியதாக தெரிகிறது. முதலில் அவ்வப்போது மட்டுமே விளையாடி வந்த அவர், அதன் பின்னர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார்.

    நகை கடைக்கு வேலைக்கு வந்ததும் அங்குள்ள கம்ப்யூட்டர் அறைக்கு செல்லும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்கி விடுவார். பல மணி நேரம் ரம்மி விளையாடுவார். பெட்டிங் வைத்து இவர் பல ஆயிரம் ரூபாயை இழந்து விட்டார்.

    சம்பளம் பணம் மொத்தமும் காலியான நிலையில், இவர் நகை கடையின் தங்கத்தை மோசடியாக கணக்கு காட்டி வெளியே விற்க ஆரம்பித்தார்.

    45 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் ஒரு பவுன் தங்கத்தை இவர் பவுன் 20 ஆயிரம் ரூபாய் என தனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக விற்பனை செய்து வந்தார்.

    கடந்த 6 மாதத்தில் இவர் 180 பவுனுக்கும் அதிகமாக விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை 37 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி ஆடியுள்ளார்.

    கடந்த சில மாதங்களில் இவர் 2 கோடி ரூபாய் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் குவித்துள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் பல கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டி தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டுள்ளார். இதில் மொத்த பணத்தையும் இழந்து விட்டார். நாங்கள் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது அவர் ரம்மி ஆட்டத்தில் குவித்த பணம், இழந்த பணம் குறித்த தகவல்கள் இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் அவரிடம் கேட்டதற்கு, ரம்மி ஆட்டத்தில், இதெல்லாம் சகஜம். விட்ட பணத்தை விட அதிகமாக சம்பாதித்து விடுவேன். ரம்மி ஆடாமல் இருந்தால் எப்படி பணம் வரும் என கூறி புலம்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.
    • இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.

    இதனால் பல்வேறு சமூக பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன. இதனையடுத்து, கடந்த 10-6-2022 அன்று ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும்,

    இவ்விளையாட்டுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் குழு ஒன்றினை அமைத்திட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.

    இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இக்குழு தனது அறிக்கையினை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெருமாள் விரக்தி.
    • யாரும் இல்லாத நேரத்தில் பெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை.
    சென்னை மணலியை சேர்ந்தவர் பெயிண்டர் பெருமாள். இவர், பணத்தை செலவழித்து ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

    மேலும், வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்தும் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

    இதனை பெருமாளின் மனைவி அவரது நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெருமாள் விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் பெருமாள் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • இது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

    அதில் ஆன்லைன் விளையாட்டுகள் தற்கொலையை தூண்டுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்க்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×