search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student suicide attempt"

    • 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை அங்குள்ள புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது.
    • திருமணத்திற்கு முந்தைய தவறான உறவில் குழந்தை பிறந்ததால் அதனை விட்டுச்சென்றதும் உறுதியானது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில் நேற்று இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டது.

    உடனடியாக அங்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டனர்.

    மேலும் இது குறித்து அவர்கள் ஜீயுபுரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் சமூக நலத்துறையை சேர்ந்தவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இங்க்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்பட்டது.

    இதற்கிடையே பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற மர்மநபர் யார் என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை அங்குள்ள புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது. திருமணத்திற்கு முந்தைய தவறான உறவில் குழந்தை பிறந்ததால் அதனை விட்டுச்சென்றதும் உறுதியானது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த தகவல் அறிந்த கல்லூரி விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்து மயங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழந்தை அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஜீயபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்த குழந்தையை வீசிச்சென்ற மாணவி, போலீசாருக்கு பயந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கவுதம் நேற்று இரவு வீட்டில் செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார்.
    • தாய் ‘பாடம் படிக்காமல் என்ன விளையாட்டு’ என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    போரூர்:

    விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, இவரது மகன் கவுதம் (வயது18) பாலிடெக்னிக் மாணவர்.

    கவுதம் நேற்று இரவு வீட்டில் செல்போனில் 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தார். இதை கண்ட அவரது தாய் 'பாடம் படிக்காமல் என்ன விளையாட்டு' என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுதம் வீட்டில் இருந்த ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவுதமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது.
    • பணத்தை இழந்த கல்லூரி மாணவர் மனவேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 20). இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அதை அறிந்த அவரது பெற்றோர், மாணவரை ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இதுபற்றி ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால் மயிலாடுதுறை கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் - உறவுப்பெண்ணை போலீசா கைது செய்தனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திரு விழந்தூர் மொட்டவெளி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் இளம்பெண் தேவி (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் தேவியிடம் மணலூர் தெற்கு வீதியை சேர்ந்த வாலிபர் அருள்தாஸ் (வயது 28) என்பவர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அருள்தாசுக்கு ஆதரவாக அவரது அண்ணி ஜமுனா (35), மற்றும் உறவுப்பெண் சங்கீதா (33) ஆகியோரும் தேவியிடம் அருள்தாசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதனால் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததால் மனமுடைந்த தேவி, கடந்த 16-ந் தேதி வீட்டில் வைத்து தூக்குப்போட்டார். அப்போது இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து தேவியை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாபுராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக அருள்தாஸ், உறவுப்பெண் சங்கீதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜமுனாவை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×