search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "movement"

    • நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.

    நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

    • அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு ,தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியடைந்துள்ளது. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை -மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்வதும் மாலையில் அணை பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    எனவே யானைகள் சாலையை கடக்கும் வரையில் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து சாலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். ரத்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட இணை செயலாளர் மீனா கோரிக்கைகளை வலியுறுத்தி படிவத்தில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    10 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தால் கையெழுத்திட்டும், கைரேகை வைத்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    ரத்த கையெழுத்து இயக்க படிவத்தை வருகிற 30-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடும், கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை சமூக நல ஆணையர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • மதுரை வழியாக தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • முக்கிய ரெயில் நிலையங்க–ளில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    விடுமுறை கூட்ட நெரி–சலை சமாளிக்க தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவ–தாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    வருகின்ற 11-ந்தேதி துவங்கி 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரி–சல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின் சார்பில் தாம்பரம்-திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு ரெயில் இயக்க இருப்பதாக ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி வருகின்ற 11-ந்தேதி (06051) தாம்பரத்திலிருந்து சிறப்பு விரைவு ரெயில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணியளவில் திருநெல் ேவலியை சென்றடையும். அதேபோல (06052) திருநெல்வேலியில் இருந்து 12-ந்தேதி மாலை 5.50 மணி அளவில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 4.10 மணி–யளவில் தாம்பரம் சென்றடையும்.

    இதில் இரண்டு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி உடைய பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்ப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண் டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி ஊராட்சியில் வெங்கட்ரமண கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனி என்பவர் தனது ஆடுகளை மேச்சலுக்காக அவிழ்த்து விட்டதாக தெரிகிறது. இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஆடுகளை தேடியபோது அங்குள்ள கரட்டு பகுதியில் 3 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதை பார்த்து சீனி அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சீனி டேனிஷ்பேட்டை அலுவலர் தங்கராஜூக்கு தகவல் கொடுத்தார். மர்ம விலங்கு நடமாட்டம் இருந்தால் கால்தடம் பதிந்து இருக்கும். அப்படி இருந்தால் இந்த பகுதியில் முகாமிட்டு மர்ம விலங்கை பிடித்து விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

    • தங்காய்புதூர், மீனாட்சி வலசு மற்றும் சின்னாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • அந்தப் பகுதியில் அதிகளவில் மான்கள் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கண்டியன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட தங்காய்புதூர், மீனாட்சி வலசு மற்றும் சின்னாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கோபால் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அந்தப் பகுதியில் அதிகளவில் மான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், ஆனால் சிறுத்தை அந்த பகுதியில் இருப்பதற்கான கால் தடங்கலோ, வேறு எந்த அறிகுறியும் இல்லை என வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் தெரிவித்தனர்.  

    • கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் பெரம்பலூரில் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளர் ராஜா கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பா.ம.க.வின் பெரம்பலூர் மாவட்ட பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜா என்ற காட்டு ராஜா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த அமைப்பினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

    • விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் தீ வைப்பு மற்றும் வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் அப் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    மொத்தம் 14 இடங்களில் சோதனை சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    குற்றவாளிகளை கண்டறிய நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தெரிவித்துள்ளார்.

    ஜேடர்பாளையம் போலீஸ் நிலையம் 9498101050, நாமக்கல் கட்டுப்பாட்டு அறை 9498181216, 04286280007, நாமக்கல் தனிப்பிரிவு அலுவலகம் 9498101020, நாமக்கல் எஸ்.பி., அலுவலகம் 9498181340, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., அலுவலகம் 8300014434, 9498101023, பரமத்தி இன்ஸ்பெக்டர் 9443522993, ஜேடர் பாளையம் தனிப்பிரிவு போலீசார் 9498123154. மேற் கொண்ட தொலைபேசி எண்ணுக்கு சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் பொதுமக்கள் தகவல் தரலாம். மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் அறிவித் துள்ளனர். மேலும் கிராம பகுதிகளில் தொலைபேசி எண்களை நோட்டீஸ் அச்சடித்து விநியோகத்து வருகின்றனர்.

    • சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்தது.
    • ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெரும்பாலான பகுதிகள், காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. இது ஈரோடு மாவட்டம் வரை பரந்து விரிந்து உள்ளது.

    இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்ெடருமை, மான் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டெருமை, கரடி ஆகியவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.

    கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒரு சிறுத்தை இரைதேடி முகாமிட்டு உள்ள சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுபோன்று வன விலங்குகளும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது குடியிருப்பு வாசிகளை கலக்கமடைய செய்துள்ளது. இதில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள்ளே உணவு தேடி சுற்றிவந்துள்ளது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    • நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
    • இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என்ற மாற்றத்தை நோக்கி நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிலிருந்து தொடங்கிய நடை பயண இயக்கத்தில் முன்னால் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகரச் செயலாளர் சுந்தர், நிர்வாகிகள் சாமிநாதன், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.

    • கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    ெரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ெரயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த தகவலை சேலம்

    ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • திருச்சியிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு முற்பகல் 11.40 மணிக்கு சென்றடையும்.
    • திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூரில் நாளை (சனிக்கிழமை) உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.

    இதனையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி-திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06131) இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் திருச்சியி லிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பொன்மலை, மஞ்சத்திடல், திருவெறும்பூர், சோளகம்பட்டி, பூதலூர், ஆலங்குடி, தஞ்சாவூர், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குளிக்கரை வழியாக திருவாரூக்கு முற்பகல்
    11.40 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்க மாக திருவாரூர்-திருச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06132) திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.

    இதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை-திருவாரூர் சிறப்பு ரெயிலானது (06133) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூரை இரவு 10.20 மணிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நாளை ஒரு நாள் மட்டும் திருவாரூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் (06134) திருவாரூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 5.55 மணிக்கு வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×