வாழப்பாடி வட்டாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்க தொடக்கம்

நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.
வாழப்பாடி அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு இயக்க தொடக்க  விழா நடந்தபோது எடுத்தப்படம்.
வாழப்பாடி அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு இயக்க தொடக்க விழா நடந்தபோது எடுத்தப்படம்.
Published on

நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com