search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild animal"

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு ,தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியடைந்துள்ளது. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை -மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்வதும் மாலையில் அணை பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    எனவே யானைகள் சாலையை கடக்கும் வரையில் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து சாலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
    • வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானி சாகர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச்சர கங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    இதையொட்டி வன ப்பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவைகளின் கணக்கெடுக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை தொடங்கிய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.

    முதல் நாளான இன்று பகுதிவாரியாக வனத்துறை ஊழியர்கள் பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நாளை (செவ்வாய்க்கிழமை) வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.மேலும் 4 நாட்களும் பகுதிவாரியாகவும், நேர்கோட்டுப் பாதையிலும், சுழற்சி முறையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    ஒரு குழுவிற்கு வன க்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், உணவு, தண்ணீர், ஜி.பி.எஸ், ரேஞ்ச் பைண்டர், காம்பஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று, இந்த புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த 6 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் 4 நாட்களுக்கு பிறகு சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களிலும் தானியங்கி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    இதை தொடர்ந்து 3 மாதங்கள் அந்த தானியங்கி கேமிராக்கள் மூலம் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம், பாலினம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வீடியோ பதிவுகள் மற்றும் நேரடி கணக்கெடுப்பின் இறுதி எண்ணிக்கை உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    வனப்பகுதியில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தானியங்கி கேமிரா என மொத்தம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 700 கேமிராக்களை பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    சென்ற ஆண்டு வரை நடைபெற்ற கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் ஆரோக்கியமான வன ச்சூழலில் வாழ்ந்து வருவது. வனத்துறையினரின் புள்ளி விவரங்களின்படி தெரியவருகிறது.

    தற்பொழுது நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின் இறுதி வடிவம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, மேலும் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து தெரிய வரும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக உயிரியலாளர் சக்திவேல் தெரித்துள்ளார்.

    • வத்திராயிருப்பு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?
    • தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வத்திரா யிருப்பு மலையடிவார பகுதிகளில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கான்சாபுரம் அருகே ஓடை யில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அத்திக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தென்னந் தோப்பில் 5 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத் தடுத்து சிக்கிய சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது கான்சா புரத்தை சேர்ந்த சோலை யப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு வெடிகுண்டு களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக அதனை அங்கு யாரோ மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    ஆனால் பதுக்கிவைத்தது யார்? என்பது தெரிய வில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகள் வேட்டை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தோட்ட உரிமையாளர் சோலை யப்பனிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×