என் மலர்
நீங்கள் தேடியது "Movement"
- நெல்லையில் இருந்து மதுரை வழியாக பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, நெல்லையில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து வருகிற 18, 25-ந் தேதி செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு தானப்பூர் செல்லும்.
மறு மார்க்கத்தில் தானாப்பூரில் இருந்து வருகிற 21-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரெயில் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக, திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு நெல்லை செல்லும்.
நெல்லையில் இருந்து தானாப்பூர் செல்லும் சிறப்பு ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல் வழியாக பாட்னாவில் நின்று செல்லும்.
தானாப்பூரில் இருந்து நெல்லை வரும் ரெயில் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக செல்லாமல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
- 2 பொது பெட்டி உள்ளிட்ட 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.
திருப்பூர்:
வருகிற 25ந் தேதி, திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ெரயில் (06056) இயக்கப்படுகிறது.இரவு, 7:40க்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் மறுநாள் மதியம், 12:30க்கு சென்னை சென்று சேரும்.மறுமார்க்கமாக, வரும் 26ந் தேதி மதியம், 3:10க்கு சென்னையில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.
சிறப்பு ெரயில் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், அலுவலா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 7ஏ.சி., பெட்டி, 6 படுக்கை வசதி முன்பதிவு, 2 பொது பெட்டி உள்ளிட்ட 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
- தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்து 31-வது மாவட்டமாக மயிலாடுதுறைக்கு வருகைதந்துள்ளேன்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்திடவேண்டும் என அவை தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான தமிழ்மகன்உசேன் ஆன்மிக பயனமாக சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார்.
அதில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைதலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏகே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், நகரசெயலாளர் வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் தமிழ்மகன்உசேன் பேசுகையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகைதந்துள்ளேன்.
எம்ஜிஆர்.ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தபோகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை ஆயப்படுத்திக்கொண்டு வழிநடத்தினார்.
இதுதொடரவேண்டும் என்றார்.
- 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
- அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 11 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அதனை கண்டித்து திட்டச்சேரி, கட்டுமாவடி, புறாக்கிராமம், ப.கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேற்கண்ட பகுதிகளில் முழு கடை அடைப்பு நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் கடை அடைப்புகள் நடைபெற்றது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரோட்டை முழுமையாக புதுப்பித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.
- உடுமலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் இவ்வழித்தடத்தில் சென்று வந்தது.
உடுமலை:
உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் ரோட்டில் சின்னாறு வரையுள்ள 28.80 கி.மீ., நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்களின் வழியாக இந்த ரோடு செல்கிறது.மறையூர், காந்தலூர், மூணாறு உட்பட கேரள மாநில பகுதிகளில் இருந்து அதிக அளவு வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாக உடுமலைக்கு வருகின்றன.
அதே போல் உடுமலையிலிருந்து சுற்றுலா வாகனங்கள் இவ்வழியாக அதிக அளவு செல்கின்றன.சுற்றுலா மற்றும் இரு மாநில போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ரோடு பல இடங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக தொடர் மழைக்குப்பிறகு ரோட்டோரம் அரிக்கப்பட்டுள்ளது.ரோட்டின் ஒரு பகுதி குழியாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது நிலைதடுமாறி இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டை முழுமையாக புதுப்பித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.
உடுமலையில் இருந்து சின்னார், மறையூர் வழியாக மூணாறுக்கு இயக்கப்படும் பஸ்களை நம்பி, நூற்றுக்கணக்கான பயணிகள் உள்ளனர். முன்பு, மாலை 4:30 மணிக்கு உடுமலை பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் இவ்வழித்தடத்தில் சென்று வந்தது.தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இப்பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உடுமலைக்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் மறையூர் மக்கள் இரவு, 7:30 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.முக்கிய வழித்தடத்தில் திடீரென அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பஸ் இயக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு இரு மாநில பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தினர் மீண்டும் மாலை நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓணம் பண்டிகையைaயொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
- இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
சேலம்:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ெரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ெரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, கூடுதலாக ஒரு ெரயில் மங்களூரு முதல் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.
அதன்படி மங்களூரு- தாம்பரம் சிறப்பு ெரயில் (வண்டி எண்-06050) வருகிற 11-ந் தேதி மங்களூருவில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடைகிறது.
பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
- மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 2-வது மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும். இது தொடர்பாக மன்னார்குடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் புத்தக திருவிழா தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 2-வது முறையாக புத்தக திருவிழா நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவு ஆற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதற்காக தான் புத்தக திருவிழா நடத்துகிறோம். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி பயன் பெற வேண்டும்.
மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை தானமாக அளிக்கலாம். இதற்காக புத்தக தானம் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
ெமாத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ரூ.40 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. இம்முறை ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை வெற்றியடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, யேசுதாஸ், அன்பரசு, சேதுராமன், பி.ரமேஷ், கோபால், கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மற்றும் பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.
ஆனைமலை:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனசரகங்களில் யானை, புலி, கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக வில்லோனி, வேவர்லி, தோணிமுடி, நடுமலை, கவர்க்கல், அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் கரடிகள் நடமாட்டம் உள்ளது.
இந்த நிலையில் ஆழியாறு-வால்பாறை சாலையில் காண்டூர் கால்வாய் கடக்கும் பகுதியில் கரடி ஒன்று சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு அருகே வால்பாறை சாலையில் கரடி ஒன்று சுற்றி திரிவதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.
வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்வது, புகைப்படம் எடுப்பது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனவிலங்குகளை அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும் வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சட்டங்களையும், விதிகளையும் மதித்து நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
களக்காடு புலிகள் காப்பக மலையடிவார பகுதிகளில் தற்போது பனம் பழம், வாழைப்பழம், சப்போட்டா மற்றும் கொல்லம் பழம் (முந்திரி) ஆகிய பழங்கள் விளையும் பருவம் என்பதால் வனவிலங்குகளான கரடி, குரங்கு போன்றவைகள் காட்டைவிட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதனால் விவசாயிகள் யாரும் விளைநிலங்களுக்கு இரவு நேரங்களில் தனியாக செல்வதையோ, அங்கு படுத்து உறங்குவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வனவிங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், திருப்பி காட்டிற்குள் அனுப்புவதற்காகவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களில் வன விலங்குகளை பார்த்தால் உடனடியாக 7598401438 (களக்காடு வனவர் செல்வ சிவா). 9171513119 (திருக்குறுங்குடி வனவர் ஜெபிந்தர் சிங் ஜாக்சன்) ஆகிய செல்போன் நம்பர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டும் பணி நடைபெறுகிறது. இறுதிகட்ட பணிகள் முடிந்து விரைவில் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.
மேலும் புதிய பஸ் நிலையத்திலும் பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலைய கட்டுமான பணியால் ஈரோடு, சேலம் பஸ்கள் யூனிவர்சல் தியேட்டர் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் பணிகள் முடிந்த நிலையில், இடங்கள் காலியாக கிடந்ததால் அங்கிருந்து ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நாளை முதல் ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி - காரைக்குடி ெரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
திருச்சி - காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இரு மார்க்கங்களிலும் வருகிற 18-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ரெயிலை முன்கூட்டியே இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் முறையே நாளை (10-ந் தேதி) மற்றும் 11-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. திருச்சி-காரைக்குடி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சனிக்கிழமைகளிலும், காரைக்குடி-திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்காது.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- ஒவ்ெவாரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை, ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். மேலும் ஒவ்ெவாரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 28-ந்ேததி ஆனி அமாவாசையையொட்டி மாதேஸ்வரன் மலைக்கு சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து 27 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதைத்தவிர தருமபுரி மண்டலத்தில் இருந்து 8 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் 28-ந்தேதி அதிகாலையில் இருந்து இரவு வரை இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






