search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money theft"

    • சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (வயது60). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சில் வசித்து வருகிறார்.

    அவ்வப்போது புதுவைக்கு வந்து சொந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராம் புதுவையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து வந்தார். வீட்டு வேலைக்காக 2 பெண்களை பணிக்கு அமர்த்தியிருந்தார்.

    இந்நிலையில் சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.

    யாரோ அதனை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சாய்ராம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் வெளிநபர்கள் யாரும் சாய்ராம் வீட்டுக்குள் வரவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

    எனவே வீட்டு வேலை செய்யும் பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டு வேலை செய்து வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
    • கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை யாரோ மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். காலை கோவில் பூசாரி ஜோதி வழக்கம் போல் வந்தார். அப்போது கோவில் கேட் மற்றும் உண்டியல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கோவில் உண்டியல் உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை- வேலூர் சாலையில் தீபம் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக் கோவில் காலையில் நடை திறப்பதும், மாலையில் நடை சாத்துவதும் வழக்கம். கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவில் கேட்டின் மேலே ஏறி கோவிலுக்குள் குதித்தனர். மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கோவில் நிர்வாகி தேவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் துணிகரம்
    • கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா மற்றும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    தெப்பல் உற்சவம் நடந்தது. இதி ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36), திவ்யஸ்ரீ (28) தம்பதி குடும்பத்தினருடன் எல்லையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தனர்.

    தொடர்ந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து போது திவ்யஸ்ரீயின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே, அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கோவில் வளாகத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் நகை திருடியவர் யார் என கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதேபோல் மற்றொரு பெண்ணிடம் 3 பவுன் நகையும், மூதாட்டியிடம் பணப்பையையும் திருடி சென்றுள்ளனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    • கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழைய பேட்டை பகு தியை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் அப்பு அப்பரஞ்சி (வயது 38).

    இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவ னத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது மனைவி கடையை திறந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 2 சிறுவர்கள் இணைந்து கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போனையும், கல்லாப் பெட்டிக்குள் இருந்த ரூ.2ஆயிரத்தையும் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் வாகனம் அங்கேயே நின்றது. இதனையடுத்து அங்கே இருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திருடி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நிரப்பி தப்பிய காட்சிகளும் பதிவாகியிருந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தது 2 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    • திருநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு போனது.
    • முதியவரிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருமங்கலம் சொக்க நாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மில் கேட் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் கடைக்கு சென்று திரும்பிய சிறிது நேரத்திற்குள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 44). இவர் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு செல்ல செம்பாக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.பஸ் நிலையத்தில் அய்யப்பன் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் அய்யப்பனின் பின் பாக்கெட்டில் இருந்த ரூ.600 பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அய்யப்பன் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள், தப்பியோடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பணத்தை பறிமுதல் செய்து அய்யப்பனிடம் கொடுத்தனர்.

    மேலும், 2 வாலிபர்களையும் கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு (வயது 35), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பதும் தெரியவந்தது.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பத்திரம், சான்றிதழ்கள் எரிப்பு
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு ஊராட்சி கண்ட கள்ளவூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40), லாரி கிளீனர்.

    இவரது மனைவி நாச்சி (35). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராம சாமி, அவரது மகன் முருகன் (40) என்பவருக்கும் வரப்பு தகராறு ஏற்பட்டதில் ராம சாமி காயமடைந்து திருப்பத் தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகி றார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாளை போலீ சார் தாலுகா போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி பெருமாள் மற்றும் அவரது மனைவி நாச்சி கடந்த 30-ந்தேதி வீட்டை பூட் டிக்கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளனர்.

    பின்னர் அங்கு அவரது உறவினர் பெருமாள் என்பவர் விட்டில் தங்கி விட்டு, போலீசாக தேர்வு பெற்று வேலூரில் பயிற்சியில் உள்ள மகளை பார்க்க நேற்று வேலூர் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் இவர்களுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக பெருமாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த வீடு மற்றும் நில பத்திரங்கள், மகள், மகன் பள்ளி சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து திருப் பத்தூர் தாலுகா போலீசில் பெருமாள் உறவினர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோ தம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு யாராவது செய்தார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37). தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
    • இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    சேலம்:

    சேலம் அருகே கருப்பூர், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37).

    இவர் சீரகாப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டை விட்டு குடும்பத்துடன் ராமேஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை, அருகில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் பார்த்து, ஹரிகரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து ஹரிகரன் தனது நண்பரான சிவபாரதி என்பவரிடம் கூறி நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த சிவபாரதி, இந்த கொள்ளை குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பட்டப்பகலில் இச்சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
    • பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனிவாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனி வாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.46 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சீனிவாசன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். டாக்டரான இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் வீட்டில் உள்ள ஒரு அறையின் அலமாரியில் சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை வைத்து பூட்டி, அதன் சாவியை மேலே வைத்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பணத்தை எடுக்க அலமாரியை திறந்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் கனகராஜ் தனது குடும்பத்தினர் மற்றும் கிளினிக்கில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தார்.

    ஆனால் யாரும் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து டாக்டர் கனகராஜ் தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாக்டர் கனகராஜ் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலைக்கார பெண்ணாக பணிபுரியும் அழகாபுரி தொட்டிய பட்டிைய சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி குருவம்மாள் (வயது60) பணத்தை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

    இதனால் குருவம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 51). இவர் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது. 

    இதுதொடர்பாக தேவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    ×