சின்னசேலம் அருகே பணம் திருடிய 2 வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சின்னசேலம் அருகே பணம் திருடிய 2 வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 44). இவர் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு செல்ல செம்பாக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார்.பஸ் நிலையத்தில் அய்யப்பன் அருகே நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் அய்யப்பனின் பின் பாக்கெட்டில் இருந்த ரூ.600 பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அய்யப்பன் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள், தப்பியோடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அந்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பணத்தை பறிமுதல் செய்து அய்யப்பனிடம் கொடுத்தனர்.

மேலும், 2 வாலிபர்களையும் கீழ்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு (வயது 35), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பதும் தெரியவந்தது.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com