search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militant"

    ஜம்மு காஷ்மீரில் இன்று எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த என்கவுண்டரில், ஒரு பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பகுதியில் இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள் இன்று காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் இந்த சண்டை நீடித்தது.

    இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ராணுவம் தரப்பில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சண்டை நடந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதே குப்வாரா காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த சண்டையின்போது ராணுவம் தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். அதற்கு அடுத்தநாள் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். #JKEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை களைய பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். #Jammukashmir #militantgunneddown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்தும், எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை. #Jammukashmir #militantgunneddown
    இந்தோனேசியாவில் காவல்துறை அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 8 வயது சிறுவன் மனித வெடிகுண்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. #IndonesiaBlast
    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து, இன்று சுரபயா நகரின் காவல்நிலையத்துக்கு அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை காவல் அதிகாரி, 2 மோட்டார் சைக்கிளில் 8 வயது சிறுவனுடன் வந்த பயங்கரவாதிகள், காவல்நிலையம் வெளியே உள்ள சோதனைச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும், இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பயங்கரவாதிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் தந்தை, ஜே.ஏ.டி எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Indonesia  #IndonesiaBlast
    பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
    மும்பை:

    பாகிஸ்தானில் பயிற்சி பெற்று மும்பை திரும்பிய பயங்ரவாதி பல்வேறு சதி திட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸ் உதவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.

    மும்பை மேற்கு பகுதியில் உள்ள புறநகரில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஒரு பயங்ரவாதி பதுங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்கத்தா போலீசின் தனிப்படை மும்பைக்கு விரைந்து வந்தது. மும்பை போலீசாரும், கொல்கத்தா போலீசாரும் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பயங்ரவாதி பிடிபட்டான். அவனது பெயர் மிர்சா பைசல் கான் என்று தெரிய வந்துள்ளது. 32 வயதாகும் இவன் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவன்.

    சில மாதங்களுக்கு முன்பு இவன் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். வெடி குண்டு தயாரிப்பதோடு தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கும் அவன் பயிற்சி பெற்றான்.

    கடந்த வாரம் அவன் மும்பை திரும்பி இருந்தான். கொல்கத்தா போலீசாருக்கு அவனை பற்றிய தகவல்கள் கிடைத்ததால் சரியான நேரத்தில் பிடிபட்டுள்ளான்.

    பயங்ரவாதி மிர்சா பைசல்கான் மராட்டியத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரை கடத்தி கொண்டு கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். பிரபல இந்தி நடிகர் ஒருவருக்கும் அவன் குறிவைத்து இருந்தான்.

    இவை தவிர இந்தியாவில் சில நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அவன் சதி திட்டம் தீட்டி இருந்தான். பாகிஸ்தானில் உள்ள பயங்ரவாதிகள் உத்தரவு வந்ததும் தனது சதி திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்தான். அதற்கு முன்னதாக அதிரடி போலீசார் அவனை பிடித்துவிட்டனர். அவனை 21-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #tamilnews
    ×