search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Me Too"

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் ஏறி குதித்து ஓடினார் என்று ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். #Vishal
    தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் விஷால். ‘மீடூ’ என்ற இயக்கம் மூலம் சமூக வலைத்தளங்களில் சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப் பிரபலங்கள் மீது ‘மீடூ’ வில் பாலியல் புகார்களை கூறியிருந்தனர்.

    வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கினர். இதைத் தொடர்ந்து நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படும் என விஷால் அறிவித்தார்.

    இந்நிலையில், விஸ்வதர்ஷினி என்கிற பெண் தனது முகநூலில் நேரலையாக வீடியோவில் பேசும் போது நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

    கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்த விஷால், 2 மணி நேரம் கழித்து, அதாவது 4 மணியளவில் பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சி.சி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என தன்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்க கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். #RadhikaApte #MeToo
    கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே இந்தி பட உலகில் முன்னணி நடிகை. மீடூ இயக்கம் பிரபலமாகும் முன்பே வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசியவர். மீடூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘நான் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

    பாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் சகிக்க முடியாது. இது இப்போது அத்தியாவசியமான ஒரு இயக்கமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு வி‌ஷயம்.



    ஆனால் மீடூ வி‌ஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே அவர்களுக்கான வசதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தவறு செய்வார்கள். ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு சென்றான். 20 நிமிடங்களில் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள்’ என்று கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #RadhikaApte
    கபாலி படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. அடிக்கடி பாலியல் புகார்களைக் கூறி பரபரப்புகளை ஏற்படுத்துபவர். தமிழ்ப் படத்தில் நடித்தபோது ஒரு நடிகர் தனக்கு பாலியல் புகார் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

    இப்போது யார் என்று பெயரையும், படத்தையும் குறிப்பிடாமல் தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கூறும் போது, “தென்னிந்திய இயக்குநர் ஒருவர் மும்பையிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது பெயர் சரியாக நினைவில்லை.

    அந்த இயக்குனர் நடிகர் விக்ரமை வைத்து பீரியட் படம் இயக்க உள்ளதாகவும், நீங்கள் நடித்தால் உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் என்றும் கூறி என்னை ஆடி‌ஷனில் பங்கேற்கும்படி அழைத்தார். இதனால் அவர் தங்கிய ஓட்டலுக்கு சென்றேன். ஒரு அறையில் 12 பேருடன் இயக்குநர் அமர்ந்திருந்தார். என்னிடம் சிறிய கோட் ஒன்று கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்.

    பின் ஒரு போட்டோகிராபர் என்னை பல கோணங்களில் போட்டோக்கள் எடுத்தார். கவர்ச்சியாக போஸ் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்படி அவர் வலியுறுத்தியது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பிறகு நடனமாட சொல்லி, சில ஆபாசமான அசைவுகளையும் செய்து காட்டும்படி சொன்னார்.



    அவர் தன் படத்துக்காகத்தான் ஆடி‌ஷன் செய்கிறாரா என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு காலையில் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி, அந்த ஓட்டலில் இருந்து தப்பித்து வந்தேன். கடைசியில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார். விக்ரமை வைத்து கரிகாலன் என்னும் படம் தொடங்க திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டது. எனவே அந்த இயக்குனரா என்று சினிமாவில் கேள்வி எழுந்துள்ளன.
    ‘மிஸ் இந்தியா’ பட்டத்துக்காக நடிகை தனுஸ்ரீ படுக்கையை பகிர்ந்தார் என்று நடிகை ராக்கிசாவந்த் பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். #MeToo #Tanushree #RakhiSawant
    பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மீடூ இயக்கம் மூலம் வெளிவந்த முதல் குற்றச்சாட்டு ஆகும்.

    அதன்பிறகு மீடூ இயக்கத்தில் நடிகர்கள், டைரக்டர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பாலியல் குற்றச்சாட்டின்போது நானாபடேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் செயல்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. தனுஸ்ரீ தத்தா பற்றி ராக்கி சாவந்த் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது:-

    தனுஸ்ரீ தத்தா 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அனைவரும் தங்களின் மீடூ கதைகளுடன் விரைவில் வெளியே வருவார்கள்.



    நான் அப்படிப்பட்டவள் இல்லை. ஆனால் தனுஸ்ரீ தான் என்னை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றினார். நான் பெரிய ஆளாக வர மாட்டேன் என்று நினைத்து அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது தவறு.

    தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார். தனுஸ்ரீயால் என் பெயர் கெடுகிறது. எனக்கு இந்தியாவில் நல்ல பெயர் உள்ளது.

    எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. இந்தியர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் தனுஸ்ரீ என் இமேஜை டேமேஜ் செய்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து போலியான மீடூ இயக்கத்தை கொண்டு வந்து என் இமேஜை கெடுக்கிறார். அவருக்கு இந்தியாவை பிடிக்காது. அமெரிக்கா தான் பிடிக்கும்.

    தனுஸ்ரீ தத்தா நன்றாக சாப்பிட்டு குண்டாகி அசிங்கமாக உடலுடன் இருக்கிறார். அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவரிடம் பணம் இல்லாததால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகி வரும் நித்யாமேனன், மீடூ இயக்கத்தில் சேரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #NithyaMenon #MeToo
    பிரியதர்ஷினி, லிங்குசாமி, விஜய், பாரதிராஜா ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இதில் பிரியதர்ஷினி இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார்.

    இப்படத்திற்கு தி அயர்ன் லேடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நித்யா மேனன் பேட்டியளித்த போது இப்படம் பற்றி கூறியுள்ளார். அதில், “இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. கதை குறித்து மிகுந்த கவனத்தோடு அவர் இருக்கிறார். ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன். சரியான பாதையில் மிகுந்த நம்பிக்கையோடு பட வேலைகளை பிரியதர்ஷினி செய்துவருகிறார்.

    இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அது ஒரு நடிகையாக எனக்கு மிக சுவாரசியமானதாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.



    மேலும் மீடூ இயக்கம் பற்றி கூறும் போது, “மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான வி‌ஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன்.

    இதுபோன்ற வி‌ஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன் என்றார்.
    மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், பெண்களை தவறாக பயன்படுத்த வில்லை என்று விஷால் கூறியிருக்கிறார். #Vishal
    திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

    இது குறித்து பேசியுள்ள நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 



    காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலையும் உள்ளது. அது நிறுத்தப்பட வேண்டும். மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை’ என்றார்.
    மீ டூ இயக்கம் இந்திய அளவில் பெரும் அலையாக மாறியிருக்கும் நிலையில், கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை ரம்யா நம்பீசன் வேதனை தெரிவித்துள்ளார். #RemyaNambeesan #MeToo
    பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பில் அடுத்ததாக நட்புன்னா என்னானு தெரியுமா என்கிற படம் ரிலீசாக இருக்கிறது.

    இந்த நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டியில் ’மீ டூ இயக்கம் ஒரு பெரும் அலையாக இப்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஓராண்டுக்கு முன்பே கேரள சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள், ‘டபுள்யூசிசி’ எனும் சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பை உருவாக்கினார்கள். 

    தங்களுடைய பிரச்சினைகளை நியாயமான முறையில் பேசத் தொடங்கியவர்களில் பலரை இந்த ஓராண்டில் கட்டம் கட்டி ஒதுக்கியிருக்கிறது கேரள சினியுலகம். கேள்வி கேட்கிறேன் என்பதற்காகவே நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று வேதனை தெரிவித்திருக்கிறார். #RemyaNambeesan #MeToo

    முன்னாள் ‘மிஸ் இந்தியா’ அழகியும், நடிகையுமான நிஹரிகா சிங், ‘மீ டூ’ என்ற சமூக வலைத்தள ஹே‌ஷ்டேக் மூலம், தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். #MeToo #NiharikaSingh
    புதுடெல்லி :

    பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் பிரபலங்கள், ‘மீ டூ’ என்ற சமூக வலைத்தள ஹே‌ஷ்டேக் மூலம், தங்களது பாதிப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் ‘மிஸ் இந்தியா’ அழகியும், நடிகையுமான நிஹரிகா சிங், அதில் தனது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூலை மாதம், டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் அனிசியா பத்ரா, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் மயாங்க் சிங்வி கைது செய்யப்பட்டார். மயாங்க் சிங்வி மீதுதான் நிஹரிகா சிங் குற்றம் சாட்டி உள்ளார். அதில், ‘‘கடந்த 2011-ம் ஆண்டு, சிங்வியை ஒரு பிறந்தநாள் விருந்தில் சந்தித்தேன். பிறகு அவர், எனது பெயரை தனது மார்பில் பச்சை குத்திக்கொண்டார்.

    என்னிடம் காதலை தெரிவித்தார். எனக்கு மோதிரம் பரிசளித்து, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருக்கும், எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவரது மோசமான குணம் தெரிந்தவுடன், நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தேன். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், என்னை ஆபாசமாகவும், சாதி ரீதியாகவும் திட்டினார். தாக்கவும் செய்தார். என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பினார்’’ என்று நிஹரிகா கூறியுள்ளார். #MeToo #NiharikaSingh
    சென்னையில் ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் பேட்டி அளித்த பா.ரஞ்சித், கதைத்திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல் என்றார். மேலும் ‘மீ டூ’ இயக்கத்திற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். #PaRanjith #MeToo
    மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ஆழ்வார்பேட்டையில் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்த ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி:- திரையுலகை கதை திருட்டு என்ற வி‌ஷயம் அச்சுறுத்துகிறதே?

    பதில்:- இதில் நிறைய வி‌ஷயங்கள் இருக்கின்றன. உண்மை பொய் இரண்டுமே இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவாலான வி‌ஷயம். படைப்பாளி என்பவன் யார், உண்மையிலேயே அங்கிருந்து திருடினாரா என்ற கேள்வி இருக்கிறது.

    அப்படி திருடிய பின்பும் அதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்ற கேள்வியும் இங்கிருக்கிறது. தான் எழுதிய கதையைப் பதிவு செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிடல் யாரிடமும் இல்லை. தற்போது அந்தச் சூழல் உருவாகி எல்லோருக்கும் பயம் வந்திருக்கிறது. இனி கண்டிப்பாகப் பதிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

    கே:- சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை பற்றி?

    ப:- ராஜலட்சுமி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை மேலோட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவாதி, நிர்பயா விவகாரத்தில் இருந்த அரசியல் அழுத்தம் ராஜலட்சுமி கொலை வழக்கில் இல்லை.



    கே:- மீ டூ பற்றி உங்கள் கருத்து?

    ப:- வரவேற்கக்கூடிய ஒன்று, அது சரியா, தவறா என்பதைப் பின்னர் பார்க்க வேண்டும். பொது வெளிகளில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினை குறித்துப் பேசக்கூடிய ஒரு தளமாக மீ டூ பயன்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். #PaRanjith #Plagiarism #MeToo #RajalakshmiMurder

    தற்போது தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh #MeToo
    வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை.

    என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி.

    வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அதனால் தான் ஒரு நடிகையாக என்னால் வளர்ச்சி பெற முடிகிறது. தற்போது 20 சதவீத படங்கள் மட்டுமே பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.



    இது 50 சதவீதமாக உயர வேண்டும். சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அதனால் மீ டூ இயக்கம் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைத்தாலும் கூட நான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
    திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி, மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா முன்மாதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். #MeToo #Parvathi
    பூ, மரியான் படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்த பார்வதி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

    மும்பையில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி மீடூ பற்றி பேசினார். ’மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இந்தியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை. அவர்களுடைய குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க வி‌ஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது.

    அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘விமென்ஸ் சினிமா கலெக்டிவ்’ போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும்‘. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தியில் மீடூவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற முடிவை முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். இதைத்தான் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

    மீடூ இயக்கம் மூலம் பலரும் பாலியல் புகார் கூறிவரும் நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #MeToo #LakshmiRamakrishnan
    மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி தொடங்கி வைத்தார். அதன்பின் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகின்றனர்.

    நடிகையும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீடூ இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது புகார் வருமாறு:-

    ‘ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன்.

    பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட்களுக்கு பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். காலையில போய் இறங்கியதும் ஹரிஹரனிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. மாலை சந்திக்கலாம் என்று கூறி இருந்தார்.

    நான் அன்றைக்கு மாலையே சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தேன். அதனால் ‘நிகழ்ச்சி முடித்து விட்டு சென்னை கிளம்பும் வழியில் நானே வந்து பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று சொன்னேன். இல்லை இன்று இரவு தங்குங்கள். நான் இங்கே வந்ததே உங்களை பார்க்கத்தான்’ என்று சொன்னார்.



    என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில் இருந்து வந்ததோ அத்தனையையும் செய்தியாக அனுப்பி விட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

    இப்போது சிலர், ‘அவர் பெரிய ஆள்; அவரை பத்தில்லாம் ‘மீ டூ’வுல பேசாதீங்க’ன்னு சொன்னாங்க. ‘ஏன் பேசாம இருக்கணும்? பெரிய ஆளுங்கன்னா அப்படி இப்படிதான் நடந்துப்பாங்கன்னு சொல்லிட்டிருந்ததெல்லாம் மலையேறிடுச்சு. அன்னைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோச்சு இல்லையா. அதனால நான் பேசியே ஆகணும்னுதான் இதைச் சொல்றேன்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் தமிழ், மலையாள உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கும் ‘பழசி ராஜா’ படத்தில் சரத்குமார், மம்முட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். பல விருதுகளை குவித்ததோடு பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.
    ×