என் மலர்
சினிமா

எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்போது தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். #AishwaryaRajesh #MeToo
வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை.
என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி.
வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அதனால் தான் ஒரு நடிகையாக என்னால் வளர்ச்சி பெற முடிகிறது. தற்போது 20 சதவீத படங்கள் மட்டுமே பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

இது 50 சதவீதமாக உயர வேண்டும். சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அதனால் மீ டூ இயக்கம் பற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அழைத்தாலும் கூட நான் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
Next Story