search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land dispute"

    • சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் மோதல் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் மாயவன் (வயது44). இவருக்கும் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(46) என்பருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இந்த பிரச்சினை தொடர்பான விசாரணைக்கு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், ஜெயமுரு–கன் ஆகியோர் மீது சங்க–ராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உலக நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    ராமசாமி மகன்நாராயண மூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சொத்து தொடர்பாக தந்தை-மகன் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு இது தொடர்பாக மீண்டும் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்க மணிக்கு எழுதிவைப்பதாக கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயண மூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை சராமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணிக்கு ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயண மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போடி அருகே இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    போடி அருகே உள்ள புதுக்காலனி சுப்புராஜ்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வனிதா (வயது 40). இவருக்கும் உறவினராக காளியப்பன் (56) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று துக்க வீட்டு நிகழ்ச்சியில் காளியப்பனும், வனிதாவும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த காளியப்பன், அவரது மனைவி கச்சம்மாள், மகன்கள் மாரிமுத்து, தங்கபாண்டி ஆகியோர் வனிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.

    கண்ணமங்கலம் அருகே நிலத்தகராறில் தம்பியை கொன்ற அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    ஆரணி அடுத்த தச்சூரை சேர்ந்தவர் சந்திரபாலன் (வயது 50). இவரது தம்பி தனபாலன் இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சந்திரபாலன் கடந்த 2016-ம் ஆண்டு தனபாலனை தம்பி என்றும் பார்க்காமல் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    ஆரணி போலீசார் சந்திரபாலனை கைது செய்தனர். இதன் வழக்கு விசாரணை ஆரணி கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாலன் ஜாமீனில் வெளிவந்தார்.

    இந்நிலையில் சந்திரபாலன் அம்மாபாளையம் அருகே உள்ள கல்லேரி என்ற இடத்தில் வி‌ஷம்குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் வந்து பரிசோதனை செய்த போது சந்திரபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயியை வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆபிரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா (வயது 70). மோட்டப்பாவின் வீட்டின் அருகே அவரது தம்பி சின்னப்பா என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், சிவபிரகாஷ் (வயது 29) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மோட்டப்பாவுக்கும் சின்னப்பாவுக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன் தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் அங்கு வந்த சின்னப்பாவின் மகன் சிவபிரகாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது பெரியப்பா மோட்டப்பாவின் வலது காலை வெட்டினார். இதில் அவரது வலது கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே சிவபிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மோட்டாப்பாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவபிரகாசை தேடி வந்தனர். அப்போது ஓசூரில் சுற்றி திரிந்து கொண்டிருந்த அவரை கைது செய்தனர். கைதான சிவபிரகாஷை ஓசூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ஓசூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
    தாரமங்கலம் அருகே நிலத்தகராறில் மோதலில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 70). இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்ட முயன்றார். இதற்கு அதே ஊரை சேர்ந்த சின்னதுரை (42) என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அம்மாசி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், சின்னதுரை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அம்மாசி, சின்னதுரை ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே விவசாயியை உடலில் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 63). விவசாயி.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜோதி(28). இவர்களுக்கு இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அடிக்கடி அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டது.

    இந்தநிலையில் நேற்று மாலை கண்ணதாசன் அங்குள்ள குளக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜோதி அங்கு வந்தார். திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து பெட்ரோலை அவரது தலையில் ஊற்றினார். பின்பு கண்ணதாசன் உடலில் தீ வைத்து விட்டு ஓடிவிட்டார்.

    உடலில் தீ பிடித்ததும் கண்ணதாசன் கூச்சல்போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண்ணதாசன் உடல் முழுவதும் தீயில் கருகியது.

    உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்தசம்பவம் தொடர்பாக ஆரோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குபதிவு செய்து தலைமறைவாகிவிட்ட ஜோதியை வலைவீசி தேடி வருகின்றார்.

    பெட்ரோல் ஊற்றி விவசாயியை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மலேசியா நாட்டில் உள்ள ஸ்ரீமஹா மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #MalaysianTemple #TempleLandDispute
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் அதற்கான  இழப்பீட்டு தொகை அளிக்க தயாராக உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வலியுறுத்தி இருந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது.



    பூர்வீக மலாய் மக்களான அவர்கள் கோவிலுக்குள் இருந்த அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு மிரட்டி, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் சிலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு வழக்கு தொடர்ந்திருக்கும் கட்டுமான நிறுவனம்தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

    சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள தைரியமின்றி அந்த நிறுவனத்தினர் கூலிப்படையை ஏவி இந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதைதொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இன்று காலை சிலர் அந்த கட்டுமான நிறுவன அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு நின்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் மதமோதல் ஏற்படும் சூழல் உருவானது.

    இந்நிலையில், இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செலாங்கோர் நகர போலீஸ் உயரதிகாரி மஸ்லான் மன்சூர் தெரிவித்துள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் சுமார் 700 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #MalaysianTemple  #TempleLandDispute
    போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செல்லம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது62). விவசாயியான இவருக்கு சொந்தமான 1 அரை ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இவரது மகன் கோவிந்தசாமி (26). கடந்த 21-ந்தேதி அன்று அன்பழகன் தென்னந்தோப்பில் தேங்காய் பறித்து கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த கோவிந்தசாமி தனது தந்தையிடம் இது எனக்கு சொந்தமாக தென்னந்தோப்பு. அதனால் நீங்கள் இந்த தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்க கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கோவிந்தசாமி தனது தந்தை என்று கூட பார்க்காமல் அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கினார். இதில் அன்பழகனுக்கு வலது கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. 

    இது குறித்து அன்பழகன் நாகரசம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தந்தையை தாக்கிய கோவிந்தசாமியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    குடியாத்தம் அருகே நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்காததால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகேயுள்ள கதிர்குளம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கீதா என்ற மகளும், பாலு என்கிற பாலசந்தர் (45) என்ற மகனும் உள்ளனர்.

    கீதா திருமணமாகி கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான பாலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலு கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதி கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் பாலு தொடர்ந்து நிலத்தை மாற்றி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை பாலு தனது தந்தையிடம் சென்று ‘உங்களுக்கு வயதாகி விட்டதால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டார் அப்போதும் கோபால் மறுத்துள்ளார்.

    அதனால் ஆத்திரம் அடைந்த பாலு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பிற்பகல் 3 மணியளவில் கோபால், தனது வீட்டின் எதிரேயுள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலு அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கோபாலின் தலையில் போட்டார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபாகரன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர் பாகூர் சிவன் கோவில் அருகே இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடை பக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜி (35) ஆட்டோ டிரைவர். இவரது அக்கா பூக்கடை வைத்திருக்கிறார்.

    இதனால் பாபுவுக்கும், ராஜியின் அக்காவுக்கும் இட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று பாபு சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜி பீர்பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்தார். இதில் தலையில் காயம் அடைந்த பாபு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பாபுவை ராஜி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்தார்.

    பின்னர் இது குறித்து பாபு பாகூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜியை தேடி வருகிறார்கள்.

    பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளாய்? என கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முனியாண்டி கத்தியால் ராஜாமணியை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜாமணி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

    ×