என் மலர்
நீங்கள் தேடியது "woman attack gang"
தேனி:
போடி அருகே உள்ள புதுக்காலனி சுப்புராஜ்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வனிதா (வயது 40). இவருக்கும் உறவினராக காளியப்பன் (56) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று துக்க வீட்டு நிகழ்ச்சியில் காளியப்பனும், வனிதாவும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காளியப்பன், அவரது மனைவி கச்சம்மாள், மகன்கள் மாரிமுத்து, தங்கபாண்டி ஆகியோர் வனிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
தேனி:
கூடலூர் விதைப் பண்ணை தெருவை சேர்ந்த நாகேந்திரன் மனைவி லலிதா (வயது48). இவர் பாப்பம்மாள் என்பவரது தோட்டத்தை பராமரித்து வந்தார். இவருக்கும் ஒரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லலிதாவை 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து தாக்கினர். மேலும் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த அவர்கள் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பீன்ஸ், கொத்தமல்லி ஆகியவற்றை அழித்து சேதப்படுத்தினர்.இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தது.
இது குறித்து லலிதா கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாப்பா, சிவக்குமார், செல்லப் பாண்டி, குணசேகரன், சரவணன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.