என் மலர்
நீங்கள் தேடியது "Gudalur woman attack"
கூடலூர் அருகே பெண்ணை தாக்கி பயிர்களை சேதப்படுத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
கூடலூர் விதைப் பண்ணை தெருவை சேர்ந்த நாகேந்திரன் மனைவி லலிதா (வயது48). இவர் பாப்பம்மாள் என்பவரது தோட்டத்தை பராமரித்து வந்தார். இவருக்கும் ஒரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லலிதாவை 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து தாக்கினர். மேலும் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த அவர்கள் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பீன்ஸ், கொத்தமல்லி ஆகியவற்றை அழித்து சேதப்படுத்தினர்.இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தது.
இது குறித்து லலிதா கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாப்பா, சிவக்குமார், செல்லப் பாண்டி, குணசேகரன், சரவணன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






