search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai"

    • சேகர் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்குப்பம்பாளையம் சாலையில் சென்றார்.
    • விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை அன்னூர் அருகே காரனூரை சேர்ந்தவர் சேகர்(32).

    இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கு ப்பம்பாளையம் சாலை யில் சென்றார்.

    அப்போது எதிரே சிறுமுகை லிங்காபுரத்தை சேர்ந்த நவீன்குமார்(30) மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன்(30) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கி ளில் வெள்ளிக்குப்பம் பாளையம் நோக்கி வந்தனர். அதே சாலையில் கருப்பசாமி(36) என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அப்போது வெள்ளிகுப்ப ம்பாளையம் சாலை பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக 3 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொ ண்டன. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் தூக்கி சாலையில் வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில், சேகர் மற்றும் நவீன்குமார் ஆகி யோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.நவீன்குமா ருடன் வந்த ஹரிஹரனுக்கு பலத்த காயமும், கருப்ப சாமி லேசான காயமும் ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சிறுமுைக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஹரியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.மேலும் லேசான காயமடைந்த கருப்பசாமி சிறுமுகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சிறு முகை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    வடவள்ளி,

    உலக சுற்றுச்சூழல் தினததை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    • அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 40க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க எம்பி பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அவர்கள் பா.ஜ.க எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரியும், அவர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

    • பாஸ்கர் சாமிதாஸ் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.
    • சாலையோரம் நின்ற சரக்கு ஆட்டோ மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

    கவுண்டம்பாளையம்

    தூத்துக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர் சாமிதாஸ் (வயது37). இவர் கோவை சுந்தராபுரத்தில் போதகராக உள்ளார்.

    இவர் சம்பவத்தன்று தனது காரில் கோவை-துடியலூர் சாலையில், மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார்.கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது.

    மேலும் அங்கு நடந்து சென்ற நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் (40) என்பவர் மீதும் மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியு ள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி வைராலாகி வருகிறது.

    • நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றனர்.
    • அனைத்து வார்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    கோவை:

    கோவை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    குறிப்பாக உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, குனிய முத்தூர், கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் உள்ளன.இந்த நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றனர். சில சமயங்களில் கடித்து விடுகின்றன. நாய்களின் தொல்லையால், வாகன ஓட்டிகள் சில நேரங்களில் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    கடந்த வாரம் கூட உக்கடம் ஞானியார் நகரில் தெருநாய் கடித்து 11 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தெருநாய்கள் தொல்லையை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

    அதன்படி கடந்த வாரம் முதல் மாநகர பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக உள்ள நாய்கள் வலைகள் மூலமாக பிடித்து ஒண்டிப்புதூர், சீரநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கருத்தடை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகரில் கடந்த ஒரு வாரமாக 50க்கும் மேற்பட்ட தெருக்களில் இடையூறாக உள்ள நாய்களை கண்டறிந்து, அவற்றை தனியார் உதவியுடன் பிடித்து கருத்தடை மையங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை 40 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளனர்.
    • பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது தமிழக அரசு உத்தரவு படி கோவை மாவட்டத்தில் 4-வது அனைத்து மகளிர் போலீஸ் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் உட்கோட்டத்தில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் தொடர்பான புகார்களுக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒரு வருடத்தில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மொத்தம் 1200 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 700 மனுக்களும் (58 சதவீதம்) பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளில், 18 வழக்குகளும் (44 சதவீதம்) மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய உட்கோட்டத்திற்கு தொடர்புடையதாகும்.

    மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் இருந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது. தற்போது பொதுமக்கள் வசதிக்காகவும், மக்கள் பயன்பெறும் வகையிலும் தங்களது பிரச்சினைகளை உடனுக்குடன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க மேட்டுப்பாளையத்தில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹ்ரிபா பர்வீன், துணைத்தலைவர் அருள் வடிவு டிஎஸ்பி பாலமுருகன், பயிற்சி டி.எஸ்பி ஜாபர் சித்திக், காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கன்னி உதய ரேகா, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், ஆனந்தக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தற்போது சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இம்மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் லதா, மாரி செலின், பிரேமலதா, ஜோதி, ஸ்வேதா, இந்து பிரியா, ஜெபிஷா மற்றும் சுஷ்மிதா ஆகியோர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சுற்றுலா போர்வையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயல்களால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. நடுவில் வால்பாறை நகராட்சி 217 ச.கிமீட்டர் பரப்பளவில் உள்ளது. வால்பாறை நகரம் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    வால்பாறையில் நிலவும் சிதோஷ்ண நிலை மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே மாலை 6 மணிக்கு பிறகு சமவெளி பகுதிகளில் இருந்து பலரும் வால்பாறைக்கு சுற்றுலா வருகின்றனர். அப்படி வருபவர்களில் பலரும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாவதாகவும் தகவல் வந்தது.

    இதையடுத்து சமூக விரோத செயல்களை தடுக்கவும், வனவிலங்கு தாக்குதலுக்கு ஆளாகாமல் தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் வருபவர்களிடம் அறை புக் செய்துள்ளீர்களா? என்ன காரணத்திற்காக வருகிறீர்கள்? எனவும் விசாரிக்கின்றனர். மேலும் அவர்கள் வைத்திருக்கும் உடைமைகளையும் சோதனை செய்கின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-வால்பாறைக்கு இரவு நேரங்களில் சட்டவிரோத சுற்றுலா, சாலையோரம் மது அருந்துவது, நள்ளிரவில் போதைப்பொருள் கடத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. நேற்று கூட சுற்றுலா பயணிகள் 2 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இவற்றை நெறிப்படுத்த வேண்டும். சுற்றுலாவை முன்வைத்து நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று கருதுகிறோம். இதனால் சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்.

    இதன் காரணமாக மாலை 6 மணிக்கு பிறகு வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படுகிறார்கள். உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறினால், அவர்கள் போனில் விசாரித்த பின்பே உள்ளே அனுமதித்து வருகிறோம். மற்றபடி வாகனங்கள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • டைட்டல் பார்க் அருகில் பி.டி. சாலை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் ரோப் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.
    • உரிய அதிகாரிகளிடம் விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். பணி தொடர்ந்து நடைபெறும்.

    கோவை

    தமிழக சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் தலைவர், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், மற்றும் உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி, கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில் குமார், பிரபாகரராஜா, மதியழகன் மாங்குடி ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    கோவை அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப்பணி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

    பின்னர் டைட்டல் பார்க் அருகில் பி.டி. சாலை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் ரோப் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

    அதனை தொடர்ந்து வெள்ளலூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், 63-வது வார்டு ராமலிங்க ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இக்குழு கோவை வருவதையொட்டி கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு தமிழக சட்டமன்ற பேரவை, சென்னை 600009 என்ற முகவரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேலும் மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். அதே போல் தனிநபர் குறை, நீதிமன்ற வழக்கு, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற மனுக்கள் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதனை அடுத்து சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு ஆய்வுக்கு எடுத்து கொண்டது.

    இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவானது நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து தமிழக சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோவி. செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு சார்பில் இன்றைய தினம் கோவை மாவட்டத்திலும், நாளைய தினம் நீலகிரி மாவட்டத்திலும் மனுக்கள் மீதான விசாரணையை கள ஆய்வு செய்யப்படும். மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நேரடி கள ஆய்வு செய்து விரைவாக நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருப்போம்.

    இந்த நிகழ்வில் எங்களுடன் சட்டப்பேரவை செயலர் பங்கெடுத்துள்ளார். அவினாசி சாலை மேம்பால பணிகள் 2024-ம் ஆண்டு முடியும் தருவாயில் விரைவாக நடந்து கொண்டு வருகிறது. இந்த பால பணிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முதல்- அமைச்சர், பொறுப்பு அமைச்சர் ஆகியோர் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நாங்கள் ஆய்வு செய்துள்ள இந்த இடங்களில் 5 இடங்கள் மனுதாரர் கோரிக்கை வைத்த இடங்களும், ஒரு இடம் நாங்கள் பொதுமக்கள் நலன் கருதி ஆய்வு செய்துள்ளோம். உரிய அதிகாரிகளிடம் விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். பணி தொடர்ந்து நடைபெறும். 122 மனுக்கள் கள ஆய்வுக்கு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
    • விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை மாநகரில் 4 வழித்தடங்களில் உயர்மட்டப்பாலங்கள் உள்ளன. இந்த பாலங்களில் வாலிபர்கள் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் இயக்குவது வாடிக்கையாக உள்ளது. விபத்து சம்பவங்களும் அடக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த 12-ந் தேதி மாலை ரெயின்போ காலனியில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பிரசாந்த் (வயது 28) என்பவர் மேம்பால சுவரில் மோதி உயிரிழந்தார்.

    இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் ராஜூ, சரவணன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் ஆகியோர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையடுத்து விபத்து நடக்காமல் தடுக்க, திருச்சி ரோடு உயர் மட்ட பாலத்தில் தற்காலிகமாக ஒளிரும் பட்டையுடன் கூடிய இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது,

    மேம்பாலங்களில் விபத்து ஏற்படுவதை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள மேம்பாலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வா கனங்களை இயக்க வேண்டும். கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் உக்கடம் பைபாஸ் சாலையில் மேம்பா லத்தின் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் எதிர்திசையில் வாகனங்களில் செல்ல கூடாது. பாலத்தில் நேராக செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வலைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்றார். 


     



     


    • 9 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாலிபர் ஒருவர் மொட்டை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    கோவை :

    கோவை மாநகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் 9 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போனதாக வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் அந்ததந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்தனர்.

    கோவை பெரியகடை வீதி, காட்டூர், சாய்பாபா காலனி, ராமநாதபுரம், பீளமேடு உள்பட பகுதிகளில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு போய்யுள்ளது. இந்த நிலையில் பீளமேடு வி.கே. ரோடு பகுதிைய சேர்ந்த ஸ்ரீகாந்த் (45) என்பவர் தனது மொபட் திருட்டு போது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் வாலிபர் ஒருவர் மொட்டை லாவகரமாக திருடி மெதுவாக சாலையில் தள்ளி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மாநகரில் நேற்று முன்தினம் 12 மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் திருட்டு போன நிலையில் நேற்று மீண்டும் 9 வாகனங்கள் திருட்டு போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் 2 நாட்களில் 21 புகார்கள் பதிவாகி உள்ளது. வாகனங்களை திருடும் கும்பல் கோவையில் முகாம் ஈட்டுள்ளனரா ? அவர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

    கோவை

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தலைவர் ராமச்சந்திரன்( வயது 72). இவர் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர் (54) என்பவரிடம் ஆஸ்பத்திரி கட்டிடத்தை வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்ததார்.

    இந்நிலையில், ராமச்சந்திரன் ரூ. 100 கோடி மதிப்பிலான தனது ஆஸ்பத்திரிையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டில் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் ஆஸ்பத்திரி தலைவர் ராமச்சந்திரன், உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    5 பேரையும் 7 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவி பாஸ்கரன் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரையும் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 5 பேரிடமும் தனித்தனியாக விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஸ்பத்திரி விவகாரத்தில் பல முக்கிய தகவல்களை அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. 

    • வாலிபர்கள் 2 பேர் தங்களுக்கு மசாஜ் செய்யுமாறு கூறி தகராறில் ஈடுபட்டனர்.
    • வாலிபர்கள் கத்தியை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் குத்தினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எம்.கே. பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மினிமோல் (வயது 43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுசிக், அவருடன் மற்றொரு வாலிபரும் மினிமோலின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறினர். அதற்கு மினிமோல் வீட்டில் வைத்து மசாஜ் செய்ய முடியாது. எனவே மசாஜ் சென்டருக்கு வாருங்கள் செய்து விடுகிறேன் என கூறினார். ஆனால் அந்த வாலிபர்கள் செல்ல மறுத்து தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் குத்தினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மினிமோலை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    ×