search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police station opening"

    • வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    தமிழகத்தில் இன்று 20 மகளிர் போலீஸ் நிலையங்களை முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார். இதில் காட்பாடி போலீஸ் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் போலீஸ் நிலையத்தை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்று திறந்து வைத்தார்.

    இதனையடுத்து காட்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் கதிர் ஆனந்த் எம்பி குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், டி.ஐ.ஜி ஆனி விஜயா,போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளனர்.
    • பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது தமிழக அரசு உத்தரவு படி கோவை மாவட்டத்தில் 4-வது அனைத்து மகளிர் போலீஸ் நிலையமாக திறக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாக பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் உட்கோட்டத்தில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் தொடர்பான புகார்களுக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒரு வருடத்தில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மொத்தம் 1200 மனுக்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 700 மனுக்களும் (58 சதவீதம்) பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளில், 18 வழக்குகளும் (44 சதவீதம்) மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய உட்கோட்டத்திற்கு தொடர்புடையதாகும்.

    மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதியில் சுமார் 5,77,613 மக்கள் தொகை உள்ளனர். மேலும் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் இருந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையமானது சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தொலைவிலிருந்து புகார் கொடுக்க வர வேண்டி உள்ளது. தற்போது பொதுமக்கள் வசதிக்காகவும், மக்கள் பயன்பெறும் வகையிலும் தங்களது பிரச்சினைகளை உடனுக்குடன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க மேட்டுப்பாளையத்தில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி, கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹ்ரிபா பர்வீன், துணைத்தலைவர் அருள் வடிவு டிஎஸ்பி பாலமுருகன், பயிற்சி டி.எஸ்பி ஜாபர் சித்திக், காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கன்னி உதய ரேகா, உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், ஆனந்தக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தற்போது சிறுமுகை இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இம்மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் லதா, மாரி செலின், பிரேமலதா, ஜோதி, ஸ்வேதா, இந்து பிரியா, ஜெபிஷா மற்றும் சுஷ்மிதா ஆகியோர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×