search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife cut"

    • ராணுவ வீரர் கைது
    • போலீசார் விசாரணை

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் விலாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 38 ) , ராணுவ வீரர்.

    விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள இவர் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று குடும்பத் தகராறு காரணமாக கையில் இருந்த கத்தியால் மனைவியை குத்த முயன்றுள்ளார். அப்போது அவரது மனைவியின் தம்பி கார்த்தி (32) தடுத்துள்ளார்.

    இதில் அவருக்கு கத்தி வெட்டு விழுந்தது . இதனால் காயமடைந்த கார்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகு றித்து கே.வி.குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • முத்துக்குமார் அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினார்.
    • மகேந்திரனின் மகன் சதிஷ்குமார் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). கட்டிட தொழிலாளி. இருவரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் இருவரது வீட்டின் இடையே ஒரு காலியிடம் உள்ளது. மழை காலங்களில் அந்த இடத்தில் சேறும் சகதியுமாக மாறி முத்துக்குமாரின் வீட்டின் சுவரில் அசுத்தம் ஆகியதாக தெரிகிறது. இதனால் முத்துக்குமார், மகேந்திரனை அழைத்து அந்த இடத்தை சுத்தம் செய்யுமாறு கூறினார்.

    அதற்கு மகேந்திரன் மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துக்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை கேட்டு மகேந்திரன் அவரை கன்னத்தில் அறைந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினார். அவர் வலி தாங்க முடியாமல் அலரி துடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அவர்கள் வருவதை பார்த்து முத்துக்குமார் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த மகேந்திரன் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மகேந்திரனின் மகன் சதிஷ்குமார் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட மகேந்திரன் வால்பாறை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விரட்டி வெட்டும் வீடியோ காட்சிகள் பரவுகிறது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் அழகாபுரி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் (வயது 34) பெயிண்டர்.

    கடைக்கு வந்த இடத்தில் பழக்கம்

    அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் அரவிந்த் (23) பைபாஸ் சாலையில் பிரபல தனியார் எலக்ட்ரீக்கல் செல்போன், டி.வி. பிரிட்ஜ் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.

    சதீசின் மனைவி செல்போன் வாங்க வந்தபோது அவருடன் அரவிந்த்துக்கு பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது.

    இதனையறிந்த சதீஷ் கள்ளக்காதலை கைவிடுமாறு 2 பேரையும் எச்சரித்தார். ஆனாலும் அரவிந்த் தொடர்ந்து சதீசின் மனைவியிடம் பேசியதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் மாலை சதீஷ் கத்தியுடன் அரவிந்த் பணியாற்றும் கடைக்கு வெளியே காத்திருந்தார்.

    சாலையில் சென்ற ஒரு சிறுவனை அழைத்து கடையில் உள்ள அரவிந்த்தை வெளியே வரும்படி கூறினார்.

    அதன் பின் வெளியே வந்த அரவிந்த்துடன் கடும் வாக்கு வாதத்தில் சதீஷ் ஈடுபட்டார். சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தை வெட்டினார். அவரிடம் இருந்து தப்பியோடிய அரவிந்த் கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். இதனை நேரில் கண்ட கடை ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். சதீஷ் வெளியே நின்று எச்சரித்தப்படி அங்கிருந்து சென்று விட்டார்.

    ரத்த வெள்ளத்தில் விழுந்த அரவிந்தை கடை ஊழியர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

    அரவிந்த்தை சதீஷ் வெட்டும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • 3 பேர் மொபட்டில் பின் தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    கோவை

    கோவை சங்கனூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் நிகந்தன் (வயது 21).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விமான நிலையம் பின்புறம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் மொபட்டில் பின் தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால் நிகந்தன் பணத்தை கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து அரிவாளால் அவரை வெட்டினர். நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த 3 பேரும் நிகந்தன் அணிந்திருந்த வெள்ளி கை செயின், மோதிரம், வாட்ச், ரூ. 150 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிகந்தனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதுகுறித்து கிளைமேட் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி செயின் மோதிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    • சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றார்.
    • இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது29), எலக்ட்ரீசியன். இவரது மனைவி பகவதி .

    சந்தோஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இணைந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். சந்தோஷ்குமாரிடம் சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கடனாக பணம் பெற்றதாக தெரிகிறது. இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இன்று காலை ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சந்தோஷ்குமாரின் இடது பக்க கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அவினாசி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வருகின்றனர்.

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் துப்புரவு தொழிலாளி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென கத்தியால் தொழிலாளியை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    வேலூர்:

    வேலூரை அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபாலன் (வயது 42). துப்புரவு தொழிலாளி. இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று திடீரென கத்தியால் வேணுகோபாலனை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த வேணுகோபாலனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலனை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்மகும்பலை தேடி வருகின்றனர். ‘வேணுகோபாலனுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே குடும்பதகராறு இருந்து வருவதாகவும், அதனால் மர்ம கும்பலை ஏவி அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

    இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

    வீட்டின் முன் பைக்கை நிறுத்திய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    பாகாயம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (வயது38). சின்ன அல்லாபுரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் (29). இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இந்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அருள் பைக்கில் சென்று நவாஸ் வீட்டின் எதிரே பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த நவாஸ் என் வீட்டின் எதிரே ஏன் பைக்கை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருள்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவாசின் காது, முதுகு பகுதியில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த நவாசை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நவாஸ் பாகாயம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து அருளை கைது செய்து வேலூர் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

    கடலூர் அருகே முன்விரோத தகராறில் கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜுலு (வயது 55). விவசாயி.

    இவர் அந்த பகுதியில் உள்ள தனது நிலத்தில் வாழை மற்றும் தர்ப்பூசணி பயிரிட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் இவரது நிலத்தில் இருந்த தர்ப்பூசணியை திருடி கொண்டு இருந்தனர்.

    இதனை கோவிந்த ராஜூலு உறவினர் தினேஷ் பார்த்து, அந்த கும்பலை தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பல் தினேசை சரமாரியாக தாக்கினார்கள். இதில் தினேஷ் காயம் அடைந்தார்.

    இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜுலு மற்றும் அவருடைய மனைவி ஜோதி ஆகியோர் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கோவிந்தராஜூலு மற்றும் ஜோதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.

    பின்னர் வீட்டில் இருந்த கார், டிராக்டர், இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் முன்விரோதம் தொடர்பாக நடந்ததா? வேறு ஏதேனும் காரணமா? என்று கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×