search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kills"

    கேரள மாநிலம் ஆழப்புழாவில் 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூச்சு திணறல் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆழப்புழாவை அடுத்த சம்பக்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகனன் நாயர்(வயது66) என்பவர் சிகிச்சைக்கு சென்றார்.

    மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்ட மோகனன் நாயருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை எடத்து வாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் சுகாதார நிலைய ஊழியர்கள், மோகனன் நாயரை ஏற்றினர்.

    மோகனன் நாயர் ஆம்புலன்சுக்குள் படுக்க வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சற்று நேரத்தில் ஆம்புலன்சும் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மோகனன் நாயரும், ஆம்புலன்ஸ் டிரைவர் சைபுதீனும் தீயில் கருகினார். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். வழியிலேயே மோகனன் நாயர் இறந்தார். டிரைவர் சைபுதீன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதில் ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. அருகில் உள்ள ஒரு கடையும் சேதமானது.

    இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜப்பானில் கொக்கைடோ மலைப்பகுதி தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேரை காணவில்லை. #earthquakejapan
    டோக்கியோ:

    ஜப்பானில் கொக்கைடோ என்ற தீவு உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அத்சுமா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைகளை கொண்டதாகும்.

    அதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


    140 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது 4 ஆயிரம் ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 ஆயிரம் பேரை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நில நடுக்கத்தின் அளவு 6.7 ரிக்டர் ஸ்கேல் ஆக பதிவாகி இருக்கிறது. இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஜப்பானில் நில நடுக்கத்தால் அதிக பாதிப்பு இல்லாத வகையிலான வீடுகளே அதிகம் கட்டப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் இல்லை.

    நிலநடுக்கம் மின் இணைப்புகளையும் கடுமையாக பாதித்தது. இதனால் அந்த தீவில் உள்ள 30 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. #earthquakejapan
    சூளகிரி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த டேங்கர் லாரியின் டிரைவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது சாமல்பள்ளம். கடந்த 1-ந் தேதி ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார், லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது பால் டேங்கர் லாரி தறிகெட்டு ஓடி மோதியது.

    கடைசியாக அந்த பால் டேங்கர் லாரி ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்னும் இடத்தில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் லாரியை ஓட்டிச்சென்ற நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குப்பச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நடராஜ் (வயது 53) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நடராஜ் இறந்தார்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.எம்.குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    இரணியல் அருகே சமையல் செய்தபோது ஆடை தீப்பிடித்து எரிந்ததில் பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
    இரணியல்:

    நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஆக்னஸ் (வயது 38). இவரது கணவர் மரிய அற்புதம். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆக்னஸ் சுங்கான் கடையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதில் தீ மள,மளவென பரவியது. இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஆக்னஸ் இறந்தார்.

    இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதேசன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்துவரும் கனமழைக்கு நேற்று ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்தனர். #UPrains
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

    குறிப்பாக, மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #16die #UPrains
    ஈராக் நாட்டில் போலீஸ் சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். #Iraq #IS #SucideAttack
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சோதனைச் சாவடியில் இருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசின் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று கிர்குக் நகரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், வெடி பொருட்கள் நிரம்பிய காரை தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிக்கச் செய்தான். இதன்மூலம் அங்கு பணியில் இருந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், இதுபோன்ற தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பினரால் தான் அதிகமாக நடத்தப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Iraq #IS #SucideAttack
    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பேரையூர்:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பி.எச்.நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ரவீந்திரகுமார் (வயது22).கடந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்த இவர், நேதாஜி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று விருதுநகரில் உள்ள நண்பரின் குலதெய்வ கோவிலில் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ரவீந்திரகுமார் தனது நண்பர் மாடக்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சீவ்ராஜ் (22) என்பவருடன் மோட்டார் சைக்களில் சென்றார்.

    இன்று காலை இருவரும் மதுரைக்கு புறப்பட்டனர். திருமங்கலம் 4 வழிச்சாலையில் உள்ள மையிட்டான்பட்டி பகுதியில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த ரவீந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சஞ்சீவ்ராஜை மீட்டு அப்பகுதியினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தஞ்சை அருகே வெண்ணாற்றில் மாணவர்களுடன் குளிக்க சென்ற பேரன் தண்ணீரில் மூழ்கி இறந்ததை கேட்ட பாட்டி மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.
    அம்மாப்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மார்வாடி தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் விவேக் (வயது15). அம்மாப்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் கிருபாகரன் (15). அம்மாப்பேட்டை திருமலை நகரை சேர்ந்த சிவானந்தத்தின் மகன் செல்வகுமார் (15).

    விவேக், கிருபாகரன், செல்வ குமார் ஆகிய 3 பேரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்று விடுமுறை நாள் என்பதால் அம்மாப்பேட்டை அருகே திருக்காட்டூர் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றுக்கு குளிக்க சென்றனர்.

    அப்போது வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் இருந்து ஆற்றில் குதித்தபோது 3 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி மாயமான 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் விவேக், கிருபாகரன் ஆகியோர் உடல்களை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

    இந்த நிலையில் மாணவன் கிருபாகரன் ஆற்றில் மூழ்கி இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் அவருடைய பாட்டி ராஜேஸ்வரி (80) துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

    மனவேதனையில் இருந்த அவர் திடீரென தனது வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் கீழே இறக்கி பார்த்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது.

    பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே வெண்ணாற்றில் மாயமான மாணவன் செல்வகுமாரை தேடும் பணி தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வீரர்களும், நீச்சல் வீரர்களும் தொடர்ந்து மாணவன் உடலை தேடி வருகின்றனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி மாவட்டம் விராலிமலை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் சகோதரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (வயது 24), அருண்பிரசாத் (23), குணசேகரன் (18) மற்றும் ராஜசேகர் (21). இதில் குணசேகரனும், ராஜசேகரும் சகோதர்கள் ஆவர்.

    இவர்கள் 4 பேரும் நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் ஒரே மோட்டார்சைக்கிளில் விராலிமலை அருகே லஞ்சமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக வந்தனர். சாப்பிட்டு விட்டு மீண்டும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    லஞ்சமேடு பிரிவு சாலையில் இருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் ஏறிய போது மதுரையில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த ஆம்னி பஸ்சின் அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் பெட்ரோல் கசிந்து சாலையில் கொட்டியதாலும், உராய்வினாலும் அந்த மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.


    இதில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த விமல்ராஜ், அருண்பிரசாத், குணசேகரன் ஆகிய 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராஜசேகர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு மூலம் ராஜசேகர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்த இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், இலுப்பூர் டி.எஸ்.பி. கோபால சந்திரன் ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆம்னி பஸ் டிரைவர் வேலூர் மாவட்டம் திருவளம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் (50) என்பவரை கைது செய்தார்.

    பலியான 4 பேரில் விமல்ராஜ், குணசேகரன், ராஜசேகர் ஆகியோர் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். அருண் பிரசாத் மட்டும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இறந்தவர்களின் உடல்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    4 பேரின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.
    ஈரான் நாட்டின் கெர்மானஷனா நகரில் இன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர். #IranEarthquake
    தெக்ரான்:

    ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்‌ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

    கெர்மான்ஷா மற்றும் தசேகாபாத் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர்.

    5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கெர்மான் ஷாவில் இருந்து வடகிழக்கில் 88 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

    முன்னதாக 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. அவை 3 ரிக்டர் ஆக பதிவாகி இருந்தது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலநடுக்கம் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது. ஆனால் அங்கு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கெர்மான்ஷா மாகாணம் ஈராக் எல்லையில் மலைகள் சூழ்ந்த பகுதி. கடந்த ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். #IranEarthquake
    கோவையில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பாலக்காட்டை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிஜூ ஜோசப். இவரது மகன் சைனஸ் சிஜூ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் சென்றார்.

    அப்போது காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் எதிரே சென்ற லோடு ஆட்டோ மீது மோதியது.

    இதில் சைனஸ் சிஜூ தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சைனஸ் சிஜூ பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
    கோவை மாவட்டத்தில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கோவை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள மண்டையூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் மோகன் தாஸ் (வயது 22). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் கோவை- பொள்ளாச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோகன்தாசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டை சேர்ந்தவர் ஹாரூன் ரசீது (வயது 45). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஹாரூன் ரசீது பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹாரூன் ரசீது பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×