search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keerthy Suresh"

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யின் 48-வது பிறந்தநாள் இன்று.
    • இவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்


    இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்க்கு சிறிய கவிதை எழுதி பதிவிட்டுள்ளார். அதில், பூ போல மனசு.. ஏறாத வயசு.. கோலிவுட்டின் வாரிசு.. அந்த பெயர் தளபதி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் படத்தில் உள்ளனர்.

    இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்த நந்தா, பிதாமகன் படங்கள் அவருக்கு திருப்புமுனை படங்களாக அமைந்தன.

    சூர்யா - கீர்த்தி சுரேஷ்
    சூர்யா - கீர்த்தி சுரேஷ்

    தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தில் சூர்யா வயதானவராகவும், இளமையான தோற்றத்திலும் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இளம் வயது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் நடித்து இருந்தார். வயதான சூர்யா ஜோடியாக நடிக்க இந்தி நடிகை ஹேமமாலினி பெயர் அடிபடுகிறது. பாலா படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பட ரிலீஸில் சசிகுமாருக்கு போட்டியாக களமிறங்க உள்ளார்.
    கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. 

    விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். 

    குட்லக் சகி படத்தின் போஸ்டர்
    குட்லக் சகி படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ‘குட்லக் சகி’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’ ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சசிகுமார் படங்களுக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ திரைப்படம் களமிறங்கி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ் படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாத நிலையில், மும்பையில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.
    இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம் தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது. 

    இந்த வரவேற்பால் திக்குமுக்காடி போன கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்.



    இதற்காக மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு விரைவில் குடியேற இருப்பதாக தகவல் வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோக்களுடன் நடிக்க தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம்தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சாவித்திரி வாழ்க்கை படத்தில் நடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் நாடு முழுக்க வரவேற்பு கிடைத்தது.

    இந்த வரவேற்பால் திக்குமுக்காடிப் போன கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தை தேர்வு செய்ய காலம் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோவே இல்லையாம்.



    முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயக்குகிறார் என்கிறார்கள்.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

    கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    அமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.

    ‘சர்கார்’ படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் எந்த தமிழ்ப்படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #KeerthySuresh
    ‘இது என்ன மாயம்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தன் அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘நடிகையர் திலகம்‘ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது.

    இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தார். அதனாலேயே, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். நரேந்திரநாத் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.



    அடுத்து போனி கபூர் தயாரிப்பில், அஜய் தேவ்கனுடன் பாலிவுட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, நாகேஷ் குகுனூர் இயக்கத்தில், ஸ்போர்ட்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக ஆதி நடிக்கிறார். 

    கீர்த்தியின் கைவசம் தற்போது எந்த தமிழ்ப் படமும் இல்லை. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KeerthySuresh #KarthickSubbaraj
     
    போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் நிலையில், கீர்த்தியும், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். #KeerthySuresh #JhanviKapoor
    தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மறைந்த புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநதி பெயர்களில் வெளியான படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தும் பாராட்டு பெற்றார்.

    அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.



    இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர் தற்போது தமிழில் அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார். 

    இந்த நிலையில் கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர். அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #KeerthySuresh #JhanviKapoor

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாரா ஒப்பந்தமாக இருந்த நிலையில், தற்போது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #PonniyinSelvan #Maniratnam
    அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். 



    சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சூழ்ச்சி செய்யும் மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

    பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தளபதி 63, தர்பார் படங்களில் நயன்தாரா பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam #AnushkaShetty

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
    அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    சோழ வம்சம் தலைதூக்கியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர். இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.



    60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

    பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது.



    செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

    மணிரத்னமின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
    இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.



    ‘பொன்னியின் செல்வன்’ பெரிய கதை என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவது சாத்தியமில்லை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க வேண்டும். படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.

    இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

    ×