என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா
Byமாலை மலர்27 May 2019 5:12 AM GMT (Updated: 27 May 2019 5:12 AM GMT)
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.
மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது.
Ponniyi Selvan Maniratnam Vikram Jayam Ravi Karthi Keerthy Suresh Amitabh Bachchan Mohanbabu Aishwarya Rai Nayanthara Sathyaraj Amala Paul Aadhi Anushka Shetty பொன்னியின் செல்வன் மணிரத்னம் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி அமிதாப்பச்சன் மோகன்பாபு கீர்த்தி சுரேஷ் ஐஸ்வர்யா ராய் நயன்தாரா சத்யராஜ் அமலாபால் ஆதி அனுஷ்கா ஷெட்டி
Next Story
×