search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keerai Recipes"

    டிரை நட்ஸ், கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காய்ந்த கருப்பு திராட்சை - ஒரு கைப்பிடி,
    பசலைக்கீரை - ஒரு சிறிய கட்டு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தேவையான அளவு,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கி பசலைக்கீரை, மிளகுத்துள், உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் காய்ந்த கருப்பு திராட்சை, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த பசலைக்கீரை நட்ஸ் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தயிர் சேர்த்து சத்தான சுவையான வெந்தயக்கீரை கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வெந்தயக்கீரை - 1 கட்டு
    தயிர் - 1 கப்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 சிறிய துண்டு
    கடுகு, உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    பூண்டு - தலா 3
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - 2 கொத்து
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெந்தயக்கீரையை கழுவி, நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

    பின், அரிந்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    அதனுடன் தயிர் சேர்த்துக் கலக்கி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால், வெந்தயக்கீரை தயிர் கறி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    அரிசி - 1 1/2 கப்
    பருப்பு - 1 கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நெய் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 டம்ளர்



    செய்முறை  :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.

    இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.

    இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பசலைக் கீரை கிச்சடி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கைக்கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு - கால் கிலோ,
    குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி - கால் கிலோ,
    முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
    வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் -  தேவையான அளவு.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் நன்றாக கழுவி காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி அதன் மேலே முருங்கைக் கீரையைத் தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், புலாவ், சாதம், பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையான கீரைத்தண்டு பச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கீரைத் தண்டு - ஒருகட்டு
    பெரிய வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    தக்காளி - 1
    கறிவேப்பிலை - கொஞ்சம்
    கொத்தமல்லி - ஒரு பிடி
    புளிப்பில்லாத தயிர் - 2 கப்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிக்க



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்து கீரை தண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும்.

    எண்ணெய் காய வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இதில் கொட்டவும்.

    இந்த பச்சடி சப்பாத்தி அசைவ உணவுகளுக்கு நன்றாக இருக்கும். இதில் தேவையெனில் கேரட்டைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாலட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். முடி வளர்ச்சிக்கும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கப்
    தக்காளி - 1
    கொண்டைக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
    பேபி கார்ன் - 6 துண்டுகள்
    இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - பாதி



    செய்முறை :

    தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    பேபி கார்ன், கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி சுடு தண்ணீரில் 1 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாலக்கீரை, தக்காளி சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து இதில் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும்.

    மேலும், வெட்டி வைத்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கடைசியாக இந்துப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

    சூப்பரான சத்தான பாலக் கீரை - கொண்டைக்கடலை சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வல்லாரை கீரை ஞாபகசக்தியை அதிகரிக்கும். ஊட்டச்சத்துமிக்கது என்பதால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று இந்த கீரையை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அதனுடன் வெங்காயம். ப.மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
    காய்ந்த மிளகாய் - 4,
    புளி - கொட்டைப்பாக்களவு,
    உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - தாளிக்க,
    எண்ணெய் - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும்.

    நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க சாலட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இன்று பசலைக்கீரை, முட்டை சேர்த்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை - கால் கட்டு
    முட்டை - 2
    தக்காளி - 2
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.

    பசலைக்கீரையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கீரையை 3 நிமிடம் சூடான நீரில் போட்டு வைத்த பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரையில் செய்த பல்வேறு உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கீரையை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
    பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    இட்லி அரிசி - 250 கிராம்,
    உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
    வெங்காயம் - ஒரு கப்,
    இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று
    எண்ணெய் - 100 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கீரைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் கீரை என்றால் சாப்பிட அடம் பிடிப்பார்கள். கீரையை இவ்வாறு கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - அரை கட்டு
    வெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - அரை அங்குலம் அளவு
    உருளைக்கிழங்கு - 25 கிராம்
    பிரெட் - 25 கிராம்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன்
    ரஸ்க் பவுடர் - 50 கிராம்
    மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பிரெட்டை தண்ணீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து விட்டு மசித்து வைக்கவும்.

    கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

    பிறகு, இத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து கட்லெட்டுகளாக செய்து வைக்கவும்.

    மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும்.

    அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ண்ணெயைத் தடவி, கட்லெட்டை போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சிறுகீரை கட்லெட் ரெடி.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×