search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Dosa"

    பித்தம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரைத்த பீட்ரூட் விழுது - அரை கப்
    தோசை மாவு - இரண்டு கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    தோசை மாவுடன் அரைத்த உப்பு, பீட்ரூட் விழுதை தேவைகேற்ப சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.

    அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பத்தை விட மெல்லியதாக ஊற்றி விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் தோசையை எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான பீட்ரூட் தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தில் மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது. இன்று சோள மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளம் - 500 கிராம்,
    உளுந்து - 100 கிராம்,
    வெந்தயம் - 2 மேசைக்கரண்டி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

    ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.

    சூப்பரான சத்தான சோள தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகு, முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து அருமையான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 1/4 கிலோ
    முருங்கைக் கீரை - கைப்பிடியளவு
    வெங்காயம் - 2
    பச்சரிசி - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கைப்பிடியளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    பிறகு அதனை தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமையில் பல்வேறு சத்தான, சுவையான உணவுகளை தயார் செய்யலாம். இன்று கோதுமை ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - முக்கால் கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    கோதுமை ரவை - அரை கப்,
    புளித்த மோர் - ஒரு கரண்டி,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று,
    இஞ்சி - சிறு துண்டு,
    கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்,  
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும் சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவா தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்
    ஓட்ஸ் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - சிறிது அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயம் - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, கொத்தமல்லி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கி கரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான ஒட்ஸ் - வெங்காய தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஆரோக்கியமான டிபன் இந்த கோதுமை வெல்ல தோசை. இன்று இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெல்லம் (பொடித்தது) - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    ரிஃபைண்ட் ஆயில் - கால் கப்,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, தோசை மாவை பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும்.

    சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை வெல்ல தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - முக்கால் கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    புளித்த மோர் - கால் கப்,
    வெங்காயம் - ஒன்று,
    இஞ்சி -  சிறு துண்டு,  
    பச்சை மிளகாய் - ஒன்று,
    நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு அதனுடன் புளித்த மோர், சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை விளிம்பிலிருந்து நடுவாக ஊற்றி, இடைவெளியை மாவால் பரத்தி, ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விடவும்.

    ஒரு பக்கம் தோசை வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை - சீரக தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    வல்லாரை கீரை ஞாபகசக்தியை அதிகரிக்கும். ஊட்டச்சத்துமிக்கது என்பதால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று இந்த கீரையை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வல்லாரை கீரை - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து அதனுடன் வெங்காயம். ப.மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சைப்பயறு வைத்து செய்யும் பெசரட்டு சத்து நிறைந்தது. இந்த சந்து நிறைந்த இந்த பெசரட்டுடன் மசாலா சேர்த்து செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சைப் பயறு - 1 கப்
    பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
    வெங்காயம் - 1 (விரும்பினால்)
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயம்

    தாளிக்க:

    எண்ணெய், சீரகம்.

    காய்கறி :

    வெங்காயம்,
    கேரட்,
    குடைமிளகாய்,
    கறிவேப்பிலை,
    கொத்தமல்லித் தழை.



    செய்முறை :


    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

    இரண்டும் நன்றாக ஊறியதும் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.

    மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.

    மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.

    சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.

    திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

    சூப்பரான மசாலா பெசரட்டு ரெடி.

    அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும். காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×