search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Millets Drumstick Leaves Adai"

    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கைக்கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு - கால் கிலோ,
    குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி - கால் கிலோ,
    முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
    வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் -  தேவையான அளவு.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் நன்றாக கழுவி காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி அதன் மேலே முருங்கைக் கீரையைத் தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×