search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palak egg salad"

    சோர்வடையாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க சாலட்டை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இன்று பசலைக்கீரை, முட்டை சேர்த்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை - கால் கட்டு
    முட்டை - 2
    தக்காளி - 2
    மிளகுத் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டையை நன்றாக வேக வைத்து ஓட்டை உரித்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முதலில் நறுக்கிய கீரையை போட்டு அதன் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    சூப்பரான பசலைக்கீரை - முட்டை சாலட் ரெடி.

    பசலைக்கீரையை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் கீரையை 3 நிமிடம் சூடான நீரில் போட்டு வைத்த பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×