search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthi"

    • 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
    • இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.


    தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படி பல பாராட்டுகளை இப்படம் பெற்றாலும் அப்போது வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்ததாக கூறப்பட்டது. பின்னர், பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் பலரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில், தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியானது.


    இந்நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்ன சொல்லனும் என்று தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு. மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் பார்த்திபன், "அதற்கு பதில் … பெரும் முயற்சியுடன் வரும் சிறு படங்களை முதல் நாள் பார்த்து ஆதரியுங்களேன்" என்று பதிலளித்துள்ளார்.


    • கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கைதி'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் இந்த படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியது.


    இதைத்தொடர்ந்து, . 'கைதி 2' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 'கைதி 2' திரைப்படம் விரைவில் உருவாகும் என கார்த்தி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், படம் எப்போது தொடங்கப்படும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 'கைதி', 'விக்ரம்' திரைப்படங்களில் நடித்த நடிகர் நரேன் 'கைதி 2' திரைப்படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நரேனிடம் 'கைது 2' எப்போது ரிலீஸ் ஆகும்? என்று கேள்வி கேட்கப்பட்டது.


    இதற்கு, "எல்சியூ-வில் அடுத்து வெளியாகப்போகும் படம் 'கைதி 2' தான், ஆனால், அதற்கு முன் எல்சியூ கன்னெக்டுடன் ஒரு 10 நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம் தான் அந்த ஷார்ட் பிலிம். அதன் பின் 'கைது 2' வெளியாகும்" என்று தெரிவித்தார்.

    எல்சியூ (lokesh cinematic universe)-ல் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கைதி'. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', விஜய் நடித்த 'லியோ' போன்ற படங்கள் எல்சியூ-வில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


    • கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜப்பான்' திரைப்படம் 11-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகர் கார்த்தி அறிமுகமான திரைப்படம் ‘பருத்திவீரன்’.
    • அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்திவீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்திவீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. 'பருத்திவீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.


    'பருத்திவீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி என பலர் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும், பொது வெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.


    பருத்திவீரன் தணிக்கை சான்றிதழ்

    இந்நிலையில் 'பருத்திவீரன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் படத்தின் தயாரிப்பாளர் பெயர் இடம்பெரும் இடத்தில் இயக்குனர் அமீரின் பெயரும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம்பெரும் இடத்தில் டீம் ஒர்க் புரொடக்ஷன் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

    இதனை பார்த்த ரசிகர்கள் தணிக்கை சான்றிதழில் ஞானவேல்ராஜாவின் பெயரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாததால், அமீர்தான் படத்தின் தயாரிப்பாளரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் இந்த புகைப்படத்திற்கு ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    • அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பருத்தி வீரன்’.
    • இப்படம் தொடர்பான பிரச்சனை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்தி வீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்தி வீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது. இப்படம் தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை குவித்தது. 'பருத்தி வீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.


    இப்படம் தொடர்பாக இயக்குனர் அமீர்- ஞானவேல் இடையே கடந்த 16 வருடங்களாக பிரச்சனை புகைந்து கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த கஞ்சா கருப்பு, சிவகுமார் குடும்பம் அமீர் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும். அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வைத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமீர் தான். பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்?. அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.


    உனக்கு அறிவு வேண்டாமா? . நீதானே படம் எடுத்தாய். என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிவிட்டு ஞானவேல் சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் ஏன் பொய் கணக்கு காட்டப் போகிறார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார்.

    சூர்யா, கார்த்தி எனக்கு வாழ்வு கொடுக்கவில்லை. எனக்கு வாழ்வு கொடுத்தது அமீரும், பாலாவும் தான். உன்னை பற்றி நான் பேசப்போவது இல்லை. சூர்யா தான் பருத்தி வீரனில் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், கார்த்தி தாடி வைத்து வந்ததால் அவர் நடித்தார். நான் ஒரு டேக்கில் நடிப்பேன். ஆனால், கார்த்தி 15 டேக்கில் நடிப்பார். 15 டேக்கிற்கு யார் காரணம் கார்த்தி தான் காரணம்.


    அமீர் வீட்டு காசை சிவகுமார் குடும்பமும், சூர்யா குடும்பமும், கார்த்தி குடும்பமும் ஆட்டையை போட்டுள்ளது. இது அவர்களுக்கு தெரிய வேண்டும். ஏன் இப்படி வஞ்சகம் வைத்துள்ளீர்கள். ஞானவேல் ராஜா, அமீரின் பணத்தை கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசினார்.

    • ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை.
    • "பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை.

    இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ல் வெளியான திரைப்படம் "பருத்திவீரன்". இந்த படம் நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதையடுத்து கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான "ஜப்பான்" படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறிய அமீர், "பருத்திவீரன்" படத்தால் தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சிவக்குமார் குடும்பத்தினருடன் நல்ல நட்பு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதனை கெடுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

    அமீரின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை போலவே இன்னும் சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார்.


    இதையடுத்து, இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பருத்திவீரன்" தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்சனை "YOUTUBE" உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.

    "பருத்திவீரன்" தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.


    சசிகுமார் பதிவு

    "பருத்திவீரன்" திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலக்கட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர்.

    அதன் பின்னரே, நான் எனது "TEAMWORK PRODUCTION HOUSE" நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், "பருத்திவீரன்" படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்சனையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இயக்குனர் சசிகுமார், அமீருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மவுனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்திவீரன்'.
    • இப்படத்தால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அமீர் கூறினார்.

    இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ல் வெளியான திரைப்படம் 'பருத்திவீரன்'. இந்த படம் நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதையடுத்து கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறிய அமீர், 'பருத்திவீரன்' படத்தால் தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சிவக்குமார் குடும்பத்தினருடன் நல்ல நட்பு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதனை கெடுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

    அமீரின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தன்னை போலவே இன்னும் சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை.

    "பருத்திவீரன்" தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்சனை "YOUTUBE" உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.


    அமீர் அறிக்கை

    "பருத்திவீரன்" தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.

    "பருத்திவீரன்" திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலக்கட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர்.

    அதன் பின்னரே, நான் எனது "TEAMWORK PRODUCTION HOUSE" நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், "பருத்திவீரன்" படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்சனையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.

    "பருத்திவீரன்" திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து "படத்தை நீங்களே வெளியிடுங்கள்" என்று சொன்னவர்களும், அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.!

    "பருத்திவீரன்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.


    அமீர் அறிக்கை

    நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பிவிடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.!

    உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட, என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரை வழிநடத்தும் பெரியவர்கள், "இதுபோல் யாரையும் அவதூறாக பொதுவெளியில் பேச வேண்டாம்," என அவருக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பூமியில், "அநியாயமும், அக்கிரமங்களும், அநீதியும் தலை விரித்தாடுகின்ற போது கண்ணன் அவதாரம் எடுப்பார்.." என்ற கீதையின் வாசகத்தைப் போல, தமிழகத்தில் நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு, அமெரிக்காவில் இருந்து நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமாகிய திரு.கணேஷ் ரகு அவர்களுக்கு என் உளப்பூர்வமான, கோடானகோடி நன்றிகள்.!

    "பருத்திவீரன்" தொடர்பான வழக்கு மற்றும் விபரங்கள் அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாலும், அதில் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிற நிலையில், என் பக்கம் நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனக்கு ஆதரவளித்து, எனக்காக குரல் கொடுத்த, என்னைத் தெரியாத, என்னோடு உறவாடாத அனைத்து செய்தியாளர்களுக்கும், என் மீது அன்பு கொண்ட பொதுமக்களுக்கும் நிச்சயமாக நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். என்றென்றும் அவர்களுக்கு நன்றி.!

    "பருத்திவீரன்" பட பிரச்சனை மீண்டும் மீண்டும் 'YOUTUBE" உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், "மாயவலை" படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இனியும், இந்த பிரச்சனை தொடர்பாக என்னை யாரும் அணுக வேண்டாம் என்று பணிவோடு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் கார்த்தி பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் நடிப்பில் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

    கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' திரைப்படத்தின் மூலம கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கார்த்திக்கு பாராட்டையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கைதி என படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. கார்த்தியின் 25-வது படமான 'ஜப்பான்' திரைப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், கார்த்தியின் 16 வருட சினிமா பயணத்தை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என நினைக்கிறீர்களா? என்று கவுதம் மேனன் கார்த்தியிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கார்த்தி, "சூர்யாவுடன் நடிக்க எனக்கு பயமாக இருக்கு. ஆனால், சில நேரங்களில் ஏன் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்கக் கூடாது என யோசிப்போம். சில வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இருவரும் சேர்ந்து நடிக்குமாறு கூறினார். நல்ல கதை அமைந்தால் நடிப்போம்" என்று பேசினார்.

    • நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.


    'ஜப்பான்' திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து நடிகர் கார்த்தி இப்படத்தின் முதல் காட்சியை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.



    'ஜப்பான்' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.



    'ஜப்பான்' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.



    அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.


    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’.
    • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குனர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார் என்றார்.


    நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

    ×