ரசிகர்களுடன் ஜப்பான் முதல் காட்சியை பார்த்த கார்த்தி

நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களுடன் ஜப்பான் முதல் காட்சியை பார்த்த கார்த்தி
Published on

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

'ஜப்பான்' திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து நடிகர் கார்த்தி இப்படத்தின் முதல் காட்சியை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com