search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka polls"

    • காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான.
    • 224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இதில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 16.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.

    காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், மணப்பெண் ஒருவர் தங்களின் வாக்குகளை அளிக்க வாக்குச்சாவடிக்குள் வந்துள்ளார்.

    சிக்கமகளூர் மாவட்டம் மூடிகீரே சட்டசபைத் தொகுதியில் உள்ள மக்கோனஹல்லி பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வந்த பெண் ஒருவர் ஆர்வமாக வாக்களித்தார்.

    • கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று காங்கிரஸ் கூறியது.
    • காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மக்களுக்கு கடிதம் எழுதினார். அதில், கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் பணிக்காக உங்கள் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறேன் என கேட்டுக்கொண்டார்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோள், தேர்தல் விதிமீறல் என பலரும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று கூறியது. அத்துடன், இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பு) ரன்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். சட்டங்கள் பிரதமருக்கு பொருந்துமா இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.
    • மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம் என பாஜக கூறி உள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. 'சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் கர்நாடகாவின் இறையாண்மை என்ற வார்த்தைதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

    'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.

    இந்த புகார் மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பாக விளக்கம் அளித்து, திருத்த நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறி உள்ளது. 

    • பிரதமர் மோடி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார்.
    • தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.

    இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் அடங்குவர்.

    சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் பொது வாக்காளர்கள் ஆவர். 47 ஆயிரத்து 488 பேர் அரசு ஊழியர்கள் ஆவர். வருகிற 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

    கர்நாடக தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர். பா.ஜ.க.வை பொருத்தவரை பிரதமர் மோடி  7 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்க ளின் முதல்-மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர் கள் என 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிர தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, கட்சியின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இருப்பார் மற்றும் கபு மற்றும் உடுப்பி நகரத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார். முன்னதாக அவர் ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள்.

    பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறற்றது. அதன்பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினை பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.
    • மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான அழைப்பு பிரிவினைவாத அழைப்புக்கு சமம்.

    கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    சோனியா காந்தி பேசியதை குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சோனியா காந்தியின் இந்த கருத்து தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரசுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

    'இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம். அத்துடன், இது மோசமான பின்விளைவுகளுக்கும் வழிவகுக்கும்' என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது.

    மேலும் இத்தகைய ட்வீட், தேசியவாதிகள், அமைதியை விரும்புபவர்கள், முற்போக்கான மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் செயல் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

    மேலும், சோனியா காந்தி பேச்சு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினையும் பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.

    • பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா என பலரும் பிரசாரம் செய்தனர்.
    • நாளை மாலையுடன் பிரசாரம் முடிய உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா, மந்திரிகள் என பலரும் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதேபோல், நாளை மாலையுடன் பிரசாரம் முடிய உள்ளதால் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திடீரென டெலிவரி பாய் ஒருவரின் பைக்கில் அமர்ந்து கொண்டு பயணித்தார்.

    அதன்பின் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது. இந்த வெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டேன் என தெரிவித்தார்.

    • கர்நாடக காங்கிரஸ் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்டது.
    • இதுதொடர்பாக கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான ஊழல் விகிதங்கள் என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. அரசாங்கத்தை சிக்கல் இயந்திரம் என குறிப்பிட்டது.

    இந்நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவும். நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை நாளை (மே 7) மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார்.
    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் வாகன பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, அவருக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..,

     

    "இதுபோன்ற அன்பை இதுவரை எங்கும் பார்த்ததில்லை. பெங்களூருவில் கிடைத்த வரவேற்புக்கு இணையில்லை. இன்று காலை நான் பொது மக்கள் தரிசனத்தை பெங்களூருவில் பெற்றேன். பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து ஒன்றை தெரிந்து கொண்டேன்."

    "இந்த தேர்தலில் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. மாறாக இங்கு கர்நாடக மக்கள் தான் பாஜக வெற்றிக்காக போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் கட்டுப்பாடு முழுமையாக மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது."

    "இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பகல்கோட்டை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட பலன்கள் பாகல்கோட் மக்களுக்கு சென்றடைந்துள்ளது," என்று தெரிவித்து இருக்கிறார். 

    • கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
    • இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.

    இந்நிலையில், கொப்பால் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

    ராகுல் காந்தி ஜாமீனில் உள்ளார். சோனியா காந்தி ஜாமீனில் உள்ளார். டி.கே. சிவகுமார் ஜாமீனில் உள்ளார். ஜாமீனில் வெளியில் வந்துள்ளவர்கள் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள்.

    நீங்கள் (காங்கிரஸ்) பிஎப்ஐ மீதான வழக்குகளை வாபஸ் பெற்றீர்கள். பஜ்ரங்தளத்தை தடை செய்யக் கோருகிறீர்கள். ஊழலில் ஈடுபட்டீர்கள். வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டீர்கள்.

    எனவே, இதை நினைவில் கொள்ளுங்கள். காங்கிரசுக்கு வாக்களித்தால் பிஎப்ஐ மீண்டும் வருவதற்கு வாக்களிக்கிறீர்கள்.

    9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஊழலுக்கு பெயர் பெற்றிருந்தது. தற்போது பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஜி20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது.

    உலகம் முழுவதிலுமிருந்து பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் வருகிறார்கள். இந்தியாவின் இந்த அடையாளம் பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.

    • அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்?
    • வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மூத்த பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து கேஎஸ் ஈஸ்வரப்பா இவ்வாறு செய்தார்.

    பஜ்ரங் தள் கட்சியை தேசப்பற்று கொண்ட அமைப்பு ஆகும், அது எப்படி பஜ்ரங் தளம் அமைப்பு தடை செய்யப்படும் என்று காங்கிரஸ் கூற முடியும்? என்று கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கேஎஸ் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தல் அறிக்கையில் பொது மக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராக மதம் மற்றும் சாதி அடிப்படையில் வெறுப்பு கருத்து பரப்பும் தனிநபர் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

     

    "சட்டம் மற்றும் அரசியலமைப்பை புனிதமான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் பஜ்ரங் தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் மீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி இதுபோன்ற அமைப்புகளை தடை செய்வது உள்பட கடுமையான நடவடிக்கை எடுப்பபோம், " என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேஎஸ் ஈஸ்வரப்பா அது முஸ்லீம் லீக் தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டார்.

    "ஒட்டுமொத்த ஒக்கலிகா சமூகமும் தனக்கு ஆதரவாக உள்ளது, இதனால் நான் தான் முதல்வராவேன் என்று டாக்டர் கே சிவகுமார் கூறுகிறார். பிற்படுத்தப்பட்டோர் சமூகம் தனக்கு ஆதவராக இருப்பதால், நான் முதல்வர் ஆவேன் என்று சித்தராமையா கூறுகிறார். இதில் இருந்தே இரு தலைவர்களும் சமூகங்கள் இடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுவது அப்பட்டமாக தெரிகிறது," என்று கேஎஸ் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

    ×