என் மலர்
இந்தியா

கர்நாடகா தேர்தல்- காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவு
- காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான.
- 224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 16.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
Next Story






