என் மலர்
இந்தியா

கர்நாடக தேர்தலில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்
- தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
- காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், மணப்பெண் ஒருவர் தங்களின் வாக்குகளை அளிக்க வாக்குச்சாவடிக்குள் வந்துள்ளார்.
சிக்கமகளூர் மாவட்டம் மூடிகீரே சட்டசபைத் தொகுதியில் உள்ள மக்கோனஹல்லி பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மணக்கோலத்தில் வந்த பெண் ஒருவர் ஆர்வமாக வாக்களித்தார்.
Next Story






