search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kangana ranaut"

    • ஆளும் பா.ஜ.க.வின் பல நடவடிக்கைகளை ஆதரித்து வருபவர் கங்கனா
    • எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை என்றார் கங்கனாவின் தந்தை

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்.

    நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, ஆளும் பா.ஜ.க.வினரின் பல நடவடிக்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரித்து வருபவர்.

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    கங்கனாவிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்நிலையில், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகவில்லை" என கங்கனாவின் தந்தை அமர்தீப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சல் பிரதேச மாநில பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்து போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

    கடந்த 2008ல் தமிழில் வெளியான "தாம் தூம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்.
    • இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார்.

    இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.


    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகை கங்கனா, "முதல் நாள் படப்பிடிப்பின் போது இந்திய சினிமாவின் கடவுள் தலைவர் ரஜினி திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். என்ன ஒரு அழகான நாள். மாதவன் உங்களை மிஸ் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் சமீபத்தில் வெளியானது.

    அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே- மிஷன் சாப்டர் 1' என்ற படத்தை இயக்கினார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், ஏ.எல்.விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாதவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
    • இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பிறகு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார்.

    இவர், இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு, இந்தியில் உருவான தேஜஸ் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்றிருந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்கனா ரனாவத், "கடவுள் கிருஷ்ணர் ஆசீர்வதித்தால், நான் போட்டியிடுவேன். பா.ஜ.க. அரசின் முற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • கங்கனா ரணாவத்தின் ‘தேஜஸ்’ திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது.
    • முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடந்து கங்கனா ரணாவத்தின் 'தேஜஸ்' திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.


    இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது" என்று தெரிவித்துள்ளார்.


    • கங்கனா சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார்.
    • இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.

    ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். அடுத்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தன்மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார். கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.


    தொடர்ந்து இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் கங்கனா ரணாவத் சர்ச்சையாக பேசிய கருத்துக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஓய் பிரிவு பாதுகாப்புடன் வெளியில் வருகிறார். நவராத்திரி திருவிழாவை ஒட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை அம்பு எய்து எரித்தார் 50 வருடத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி கங்கனா என்ற பெயரை பெற்றார்.

    இந்நிலையில் இவர் நடித்த தேஜஸ் படம் இப்போது வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் கூறும்போது, "தேஜஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். விஜய் சேதுபதியுடன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கு அடுத்ததாக தனு வெட்ஸ் மூன்றாம் பாகத்திலும் நோட்டிபினோதினி என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.

    • பெண்கள் சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்
    • மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதியை அழைக்கவில்லை

    கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; டெங்கு, மலேரியா போல ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என கருத்து தெரிவித்தார். இவரது கருத்திற்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதி மீது உத்தர பிரதேசத்திலும், மகராஷ்டிரத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். நேற்று அக்கட்டிடத்தில் அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுப்பினர்கள் சென்றனர். முதல் நாள் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு மக்களவையிலும் மாநில சட்டசபைக்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராக பெண்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இதை விமர்சித்து உதயநிதி பேசினார்.

    அதில் அவர் கூறியதாவது:

    புதிய பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. அவர் மலைவாழ் மக்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். அத்துடன் கணவனை இழந்தவர். அதனால் அவரை அழைக்கவில்லை. நேற்றைய பாராளுமன்ற முதல் கூட்டத்திற்கு இந்தி நடிகையையெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இதுதான் சனாதனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி பேசினார்.

    புதிய கட்டிடத்தை இந்திய ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.
    • இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    கங்கனா

    தற்போது இவர் 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

    இந்நிலையில், கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்.


    நவுஷீன் ஷா

    அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்." என ஆதங்கமாக பேசியுள்ளார்.

    • ’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் 'சந்திரமுகி -2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


    இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கங்கனா இந்த படத்தில் வந்தது மிகப்பெரிய பிளஸ். இந்த படத்தில் ஜோதிகா போன்று கங்கனா நடித்துள்ளாரா? என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா, தன்னை சந்திரமுகியா நினைத்துக் கொண்டார். சந்திரமுகி எப்படி இருப்பார் என்று நடித்து காண்பித்தார். இந்த படத்தில் தான் ஒரிஜினல் சந்திரமுகி யாருனு காண்பிக்கிறார்கள். கங்கனா 'சந்திரமுகி'கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.

    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
    • லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் 'ஆட்டநாயகி' பாடல் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • 'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் கதை கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குனர் பி. வாசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றின் கதையை சொல்ல சென்றதாகவும் அப்போது 'சந்திரமுகி- 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்று தெரிந்ததும் நானே நடிக்கிறேன் என்று கங்கனா ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    • பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத்.
    • இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

    பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். கங்கனா ரனாவத் கடந்த 2014-ல் வெளியான ரிவால்வர் ராணி என்ற படத்தில் வீர் தாசுடன் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது உதட்டு முத்த காட்சியில் கங்கனா, வீர் தாசை முத்தமிட்டபோது கடித்ததால் அவருக்கு ரத்தம் வந்ததாக ஒரு தகவல் வேகமாக பரவியது.



    மேலும் கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் ஹிருத்திக் ரோஷனுடன் டேட்டிங் செல்வதாக கங்கனா தெரிவித்தார். ஆனால் இதனை ஹிருத்திக் மறுத்தார். இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று பின்னர் முடிவுக்கு வந்தது. இந்த விஷயங்கள் குறித்து கங்கனாவிடம் இது உண்மையா? என நிறைய ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா தனது சமூக வலைதளத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பிறகு பாவப்பட்ட வீர்தாசை நான் தாக்கினேனா? இது எப்போது நடந்தது? என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


    இது இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கங்கனா பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்பீர்கபூர்- ஆலியாபட்டை பற்றியும் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரன்பீர்- ஆலியா ஜோடி பிரமாண்டமாக ஊரை கூட்டி திருமணம் செய்தாலும் வீட்டில் வேறு வேறு மாடியில் தான் வசிக்கிறார்கள். ஆனால் வெளியுலகிற்கு சேர்ந்து வாழ்வது போல் காட்டிக்கொள்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சமீபத்தில் லண்டன் சென்ற ரன்பீர் மனைவி ஆலியா, மகளை தனியாக விட்டு விட்டு சென்றுள்ளார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படிதான் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×