விஜய் சேதுபதியுடன் நடிக்கும் கங்கனா ரணாவத்

கங்கனா சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார்.இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.
விஜய் சேதுபதியுடன் நடிக்கும் கங்கனா ரணாவத்
Published on

ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். அடுத்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தன்மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார். கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் கங்கனா ரணாவத் சர்ச்சையாக பேசிய கருத்துக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஓய் பிரிவு பாதுகாப்புடன் வெளியில் வருகிறார். நவராத்திரி திருவிழாவை ஒட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை அம்பு எய்து எரித்தார் 50 வருடத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி கங்கனா என்ற பெயரை பெற்றார்.

இந்நிலையில் இவர் நடித்த தேஜஸ் படம் இப்போது வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் கூறும்போது, "தேஜஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். விஜய் சேதுபதியுடன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கு அடுத்ததாக தனு வெட்ஸ் மூன்றாம் பாகத்திலும் நோட்டிபினோதினி என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com