search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job"

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடடிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அப்படி வீட்டிலிருந்தே சிறப்பாக பணியாற்றுவது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் அதற்கு அவசிய தேவையானவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும். முதலாவது மடிகணினி மற்றும் எழுதுவதற்கு வசதியான டெஸ்க் வாங்க வேண்டும். அடுத்து முதுகுவலி, கழுத்து வலி வராத அளவிற்கு சொகுசான நாற்காலி, தேவையிருந்தால் ஸ்கேனர், பிரிண்டர் போன்றவற்றையும் வாங்க வேண்டும்.

    அலுவலக பணியாற்றும் போது அதற்காக படுக்கை அறையை தேர்ந்தெடுக்கக் கூடாது. படிக்கும் அறையாக இருந்தால் வேலை சிறப்பாக அமையும். படுக்கை உங்கள் கண்ணில் தெரியும் வகையில் இருந்தால் உங்களுக்கு வேலை ஓடாது. தூக்கத் தான் தோன்றும். எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.

    பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.
    வேலை வாங்கித்தருவ தாக ரூ.4 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    மதுரை:

    மதுரை ஆனையூர் ஆபீசர் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவரிடம் திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த பாலாஜி (33), அவரது மனைவி யாகினி, துரை (65), அவரது மனைவி லட்சுமி (60), விராட்டிப்பத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (40) ஆகிய 5 பேரும் ராஜேந்திரனின் மகனுக்கு வருமானவரித்துறையிலும், மருமகளுக்கு வங்கியிலும் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5,75,000 பெற்றுள்ளனர்.

    பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் ராஜேந்திரன் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டார். அவர்கள் 5 பேரும் 2 தவணைகளில் ரூ.1,65,000 திருப்பிக் கொடுத்து விட்டு மீதித்தொகை ரூ.4 லட்சத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இது குறித்து ராஜேந்திரன் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, சம்பந்தப்பட்ட பாலாஜி, யாகினி, துரை, லெட்சுமி, நாகேந்திரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலை வாங்கித்தருவதாக கூறி சிவகாசி பெண் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்ததாக விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த முருகசெல்வம் (வயது 31), முத்துச்சாமி (32), ரஞ்சித் (33) ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகாசி சாட்சியாபுரம் சாரதா நகரைச் சேர்ந்த பானு மற்றும் அவரது தம்பி மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினர்.

    இதனை நம்பி நாங்கள் உள்பட 7 பேர் தலா ரூ.80 ஆயிரம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக் கொண்ட பானு விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு இறங்கியதும் நாங்கள் வேலைக்கான விசாவில் வரவில்லை. சுற்றுலா விசாவில் வந்துள்ளோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

    இது குறித்து பானுவிடம் கேட்டபோது, மீண்டும் மலேசியா அனுப்புவதாக தெரிவித்தார். ஆனால் எங்களை அனுப்பவில்லை. 7 பேரிடமும் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மேலூர் நாவினிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைக்கண் மகள் திருவரம்போற்றி (வயது 38). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர் (வயது 42) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சுந்தர் கள்ளக்காதலி திருவரம் போற்றியிடம், “உனக்கு பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கித்தருகிறேன். இதற்கு ரூ.4.20 லட்சம் செலவாகும்“ என்று கேட்டுள்ளார்.

    இதற்கு சுந்தரின் தாய் பஞ்சவர்ணம், சகோதரிகள் ரேணுகா, ரேவதி, பேச்சியம்மாள் மற்றும் உறவினர் காட்டுராஜா மனைவி இந்திரா ஆகிய 5 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    சுந்தரின் பேச்சை நம்பிய திருவரம் போற்றி, அவரிடம் ரூ.4.20 லட்சம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். சுந்தர் கொடுத்த வாக்குறுதியின்படி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து உள்ளார்.

    இது தொடர்பாக திருவரம்போற்றி மேலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    மதகடிப்பட்டில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு கோகு நகரை சேர்ந்தவர் அரிதாஸ். கொத்தனார். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு மதியழகன் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மதியழகன் இ.இ.இ. டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மதியழகனை அரிதாஸ் கொத்தனார் வேலைக்கு அழைத்து சென்றார்.

    மதியழகன் வேலைக்கு சென்றதில் இருந்தே படித்து விட்டு இந்த வேலைக்கு வந்து விட்டோம் என மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் கமலா மாடு மேய்க்க சென்றார். வீட்டில் தனியாக இருந்த மதியழகன் மின் விசிறி கொக்கியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அரிதாஸ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- வளவனூர் மெயின்ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்பாபு (வயது34). இவர் கடந்த சில ஆண்டுகளாக வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் அசோக்நகரில் தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள பாலிதீன் கவர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெங்கடேஷ்பாபு வேலை பார்த்து வந்த தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் வெங்கடேஷ்பாபு வேலை இன்றி தவித்து வந்தார். மேலும் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ்பாபு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவர் எலி மருந்தை (வி‌ஷம்) தின்றுவிட்டு வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் வெங்கடேஷ்பாபுவை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேஷ்பாபு பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த வேலூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் ஸ்டீபன் (30). ஆர்.எஸ். புரத்தில் வணிக வளாகத்தில் உள்ள கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கலசம்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரன் (31) என்பவர் கடைக்கு வந்தார். அவர் ஸ்டீபனிடம் அறிமுகம் ஆனார். அப்போது உமா மகேஸ்வரன் தான் ஏற்கனவே கனடாவில் வேலை பார்த்ததாகவும் அங்கு நிறைய பணம் சம்பாதித்தாகவும் தற்போது கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.

    நீங்களும் கனடா சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் தான் ஏற்கனவே கனடாவில் வேலை பார்ததற்கான போலி ஆவணங்களையும் காண்பித்து உள்ளார்.

    இதனை ஸ்டீபன் உண்மை என நம்பி உள்ளார். கனடா செல்ல வேண்டுமானால் பாஸ்போர்ட்டு உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான பணம் செலவாகுமே என ஸ்டீபன் கேட்டு உள்ளார்.

    அதற்கு உமா மகேஸ்வரன் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தால் போதும். கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளார். அதன் படி அவர் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டீபன் தனது நண்பர்கள் பிரகாஷ், சவுந்தர் ராஜ், பாலாஜி, ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரிடம் தெரிவித்து உள்ளார். அவர்களும் கனடாவில் வேலை கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்துள்ளனர்.

    அதன்படி ரூ. 15 லட்சம் வரை உமா மகேஸ்வரன் வாங்கி உள்ளார். அதன் பின்னர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. அப்போது தான் ஸ்டீபன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.

    இது குறித்து கோவை குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாளிடம் புகார் அளித்தார். அவர் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். அதன்படி உதவி கமி‌ஷனர் சோம சேகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனை கைது செய்தனர். #tamilnews
    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வழங்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் செல்வம் (36). இவர் தந்தை பார்த்த வேலையை தனக்கு வழங்கும்படி தாலுகா அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.

    பலமுறை முயற்சி செய்தும் செல்வத்துக்கு வேலை கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயன் இல்லை. இதனால் மன வருத்தம் அடைந்தார்.

    இன்று காலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கலெக்டர் பொன்னையா மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு வந்த செல்வம் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கலெக்டர் பொன்னையா அங்கு வந்து செல்வத்தை சந்தித்து பேசினார். வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, செல்வம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். #tamilnews
    திருப்பூரில் மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருடைய மகன் யுவராஜ் (23). சந்திரசேகருக்கும், குண்டடம் பகுதியை சேர்ந்த விஜயகுமாருக்கும் (34) பழக்கம் ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், விஜயகுமாரிடம், தனது மகன்படித்து விட்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதற்கு விஜயகுமார், தனக்கு மின்வாரிய அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அதன்மூலம் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரசேகரின் மகன் யுவராஜ், முதல் தவணையாக ரூ.2 லட்சம், பின்னர் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் விஜயகுமாரை, யுவராஜால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் யுவராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் விஜய குமார் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் அங்கு சென்று விஜயகுமாரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்தபோது மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்ததை ஒத்துக் கொண்டார். கைதான விஜயகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ஜெயங்கொண்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கலைத் தெருவில் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி செயல்பட்டு வந்தது. இதனை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் (வயது 40), ஆண்டிமடம் அருகே உள்ள அயினேஷ்வரம் பகுதியை சேர்ந்த அல்ப்போன்ஸ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

    இந்த டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிரபலமாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்கு சென்றுள்ளனர்.

    அப்போது ஜியாவுல்ஹக், அல்போன்ஸ் ஆகியோர் வேலை கேட்டு வரும் நபர்களிடம், அவர்கள் கேட்கும் வேலை, எந்த நாட்டில் வேலை எதிர்பார்க்கின்றனர் என்பதை பொறுத்து குறைந்தது ஒரு லட்சம் முதல் பேரம் பேசி வாங்கிக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் வேலைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை ஏற்பாடு செய்து கொடுக்காததால் அவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டுள்ளனர்.

    அப்போது இருவரும் இன்றும் 10 நாட்களில் வேலை ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதியளித்ததோடு, 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அளித்த காலக்கெடுவுக்கு பின்னர், ஜெயங்கொண்டம் கலைத்தெருவில் செயல்பட்டு வந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்கு சென்றுள்னர். அப்போது அது பூட்டப்பட்டு கிடந்துள்ளது.

    இது குறித்து பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி அரியலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருவரும் வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த 8 பேர், பாண்டிச்சேரியை சேர்ந்த 18 பேர் என 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக ஒரு நபருக்கு தலா ஒரு லட்சம் வீதம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்போன்சை கைது செய்தனர். இதனை அறிந்து கொண்ட ஜியாவுல்ஹக் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரிய வந்தது.  இதுகுறித்து போலீசார் விமான நிலைய விசாரணை பிரிவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜியாவுல்ஹக்கினை விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். மேலும் அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போலீசார் ஜியாவுல்ஹக் கினை கைது செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
    பின்னர் வழக்கினை விசாரித்த நீதிபதி மதிவாணன், ஜியாவுல் ஹக்கினை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். #tamilnews
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது56). இவர் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ள எனது மகனுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.

    இதை நம்பி ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆண்டோ ஜெனிபர், டெல்பின்மேரி, பார்த்திபன், ஆண்டனி அஞ்சலி ஆகியோர்களின் வங்கி கணக்குகளில் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்து 900 செலுத்தினேன்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 2 ஆண்டுகள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டப்பணிகள் குழு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி ரூ.24 லட்சம் மோசடி செய்த ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். #tamilnews
    துடியலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை துடியலூர் தொப்பம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தார்.

    கம்பெனியில் இருந்து சரியாக சம்பளம் கிடைக்க வில்லை. மாற்று வேலையும் உடனே கிடைக்கவில்லை. இதனால் கவுதம் விரக்தியில் இருந்தார்.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×