search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koodankulam nuclear power plant"

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது56). இவர் விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ள எனது மகனுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அதற்கு பணம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.

    இதை நம்பி ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆண்டோ ஜெனிபர், டெல்பின்மேரி, பார்த்திபன், ஆண்டனி அஞ்சலி ஆகியோர்களின் வங்கி கணக்குகளில் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்து 900 செலுத்தினேன்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 2 ஆண்டுகள் ஆகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டப்பணிகள் குழு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தி ரூ.24 லட்சம் மோசடி செய்த ராஜா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார். #tamilnews
    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான மேலும் 2 சாதனங்களை ரஷியா அனுப்பியது. #KudankulamNuclearPowerPlant #Russia
    சென்னை:

    அணுசக்தி துறையில் செயல்படும் ரஷிய நாட்டின் அரசு நிறுவனமான ‘ரொஸாட்டம்’, தனது துணை நிறுவனமான ‘ஆட்டமனர்ஜோமாஷ்’ பெயரில் அணுமின் நிலைய உலைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    அந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான முக்கிய சாதனங்களை அனுப்பி இருக்கிறது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மொத்தமாக இதுபோன்று 4 சாதனங்கள் தேவைப்படுகிறது. அதில் ஏற்கனவே 2 சாதனங்கள் வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக 2 சாதனங்கள் மட்டும் வாங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த சாதனங்களை ரஷியாவில் உள்ள ஆட்டமனர்ஜோமாஷ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான ‘ஸியோ-போடல்ஸ்க்-கில்தான்’ நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது.

    நீராவியில் உள்ள நீர் குமிழிகளை விலக்கி, நீராவியின் வெப்பக்கடத்தல் திறனை அதிகரித்து, குறைந்த அழுத்த நீராவியிலேயே அதிகபட்ச பலனை பெறுவதற்கான வாய்ப்புகளை இந்த சாதனங்கள் உருவாக்குகிறது.

    இந்த சாதனம் ஒவ்வொன்றும் முறையே சுமார் 47 டன்கள் வரை எடையும், 6 மீட்டர் உயரம் மற்றும் 4 மீட்டர் விட்டமும் கொண்டதாகும். இது தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை உழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. #KudankulamNuclearPowerPlant #Russia 
    ×