search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jio"

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
    • முதற்கட்டமாக 5ஜி பீட்டா சோதனையை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 5ஜி சேவைகளின் பீட்டா டெஸ்டிங் நடைபெற இருக்கிறது. தசரா பண்டிகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்த நகரங்களில் 5ஜி சேவைகளுக்கான வெளியீடு தயாராகி வருகிறது. மேலும் 5ஜி பீட்டா டெஸ்டிங்குடன் அறிமுக சலுகைகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. பீட்டா டெஸ்டிங்கின் அங்கமாக ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்த வாடிக்கையாளர்கள் முழுமையான 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். இத்துடன் சேவை பற்றிய கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

    தீபாவளி வாக்கில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதை அடுத்து தற்போது 5ஜி பீட்டா டெஸ்டிங் துவங்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் (SA) தளத்தில் வெளியாகிறது.

    ஜியோ ட்ரூ 5ஜி அறிமுக சலுகைகள்:

    டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரனாசியில் ஜியோ 5ஜி அறிமுக சலுகைகள் இன்விடேஷன் முறையில் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.

    நான்கு நகரங்களை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் பீட்டா டெஸ்டிங் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு படிப்படியாக வெளியிடப்படும்.

    சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவம் அனைத்து வாடிக்கையாளருக்கும் கிடைக்கும் வரை பயனர்கள் பீட்டா டெஸ்டிங்கில் பயன்பெற முடியும்.

    இன்வைட் செய்யப்பட்ட ஜியோ அறிமுக சேவை பயனர்கள் தானாக 5ஜி சேவைக்கு அப்கிரேடு செய்யப்படுவர். இவர்கள் தனியே 5ஜி சிம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    ஒவ்வொரு மொபைல் போனிலும் தலைசிறந்த 5ஜி சேவையை வழங்க ஏதுவாக மொபைல் போன் உற்பத்தியாளர்களுடனும் ஜியோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

    • கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார்.
    • சோதனை அடிப்படையில் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது.

    புதுடெல்லி:

    ஐந்தாம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.

    மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும். 5 ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஏற்கனவே ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிரடி சலுகைகள் வழங்கி முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் சந்தையில் ஜியோ இலவச போன் சேவை மற்றும் குறைந்த விலை 4ஜி சேவைகளை வழங்கி பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து 2017 வாக்கில் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போனை தொடர்ந்து லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜியோவின் லேப்டாப் மாடல் ஜியோபுக் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜியோபுக் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 4ஜி சப்போர்ட் மற்றும் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஜியோபுக் மாடல் குவால்காம் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவி உருவாக்கப்பட்ட ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது.

    தற்போது கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 100 டாலர்கள் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிரிவில் ஜியோபோன் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த போன் விற்பனையில் இந்த பிரிவில் இருந்து மட்டும் ஒன்பது சதவீதமாக உள்ளன.

    ஜியோபுக் மாடலில் ஆண்ட்ராய்டு தழுவி உருவாக்கப்பட்ட ஜியோஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மைக்ரோசாப்ட் செயலிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் ARM தொழில்நுட்பத்தில் உருவான குவால்காம் பிராசஸர் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 665 வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லேப்டாப் ஏசர், லெனோவோ மற்றும் லாவா நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் விண்டோஸ் ஒஎஸ் கொண்ட லேப்டாப்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தான் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவிய ஜியோஒஎஸ் கொண்ட ஜியோபுக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பல லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக ஜியோ 5ஜி சேவைகள் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ 5ஜி சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    முதற்கட்டமாக நான்கு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன. இந்த பணிகள் டிசம்பர் 2023 வாக்கில் நிறைவு பெறும் என தெரிகிறது. ஜியோ 5ஜி சேவைகள் முதலில் 5ஜி எஸ்ஏ எனப்படும் ஸ்டாண்ட்-அலோன் நெட்வொர்க்குகளில் அறிமுகம் செய்யப்படும்.

    முன்னதாக 2016 வாக்கில் 4ஜி சேவைகள் வெளியீட்டின் போது ரிலையன்ஸ் ஜியோ அனைவரும் அதிர்ச்சியடைய செய்தது. இதே பானியை 5ஜி வெளியீட்டின் போதும் ஜியோ மேற்கொள்ளும் என தெரிகிறது. கட்டண ரீதியில் ஜியோ 5ஜி சேவைகள் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு இதர வழிகளிலும் ஜியோ தனது திட்டங்களின் மூலம் அதிர்ச்சி அளிக்கும் என தெரிகிறது.

    4ஜி சேவைகளை வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக வழங்கியதோடு, டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இதே போன்ற திட்டத்தை 5ஜி வெளியீட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது பற்றி ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    வர்த்தக பயனர்கள் மட்டுமின்றி தொழில்துறை பயனர்களுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட உள்ளன. டெலிகாம் சந்தையில் 5ஜி வெளியீட்டில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் 5ஜி சேவையை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஜியோபோன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் 5ஜி மாடலின் விலையை ரூ. 8 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 12 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையை துவங்கும் முன், நாடு முழுக்க 5ஜி நெட்வொர்க் கிடைப்பதை உறுதிப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது.

    2024 வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி எம்எம்வேவ் பிளஸ் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக 2022 ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

    முந்தைய தகவல்களில் ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் IPS LCD 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் கூகுளுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    5ஜி சார்ந்த சேவைகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயனர்களுக்கு ஜியோவின் தனியார் 5ஜி ஸ்டாக் மூலம் வழங்க கூகுள் நிறுவனத்தின் மேம்பட்ட கிளவுட் சேவையை பயன்படுத்த இருக்கிறது. இத்துடன் மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தலைசிறந்த தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்க இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.


    ஜியோவின் கிளவுட்-ஸ்கேல் டேட்டா செண்டர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம், 5ஜி எட்ஜ் லொகேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இண்டெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜியோ தெரிவித்து இருக்கிறது. இதுதவிர எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சிஸ்கோ போன்ற நிறுவனங்களுடன் நல்லுறவு கொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது.

    இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக ஜியோ அறிவித்து இருக்கிறது. சர்வதேச அளவில் முன்னணி செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் முதலீடு செய்து இருக்கிறது. ஜியோவுடன் இணைந்து கிளவுட்-நேடிவ், 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என குவால்காம் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ்டியானோ அமோன் தெரிவித்தார்.

    • வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி ஷாப்பிங் செய்ய ஏதுவாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த சேவையின் மூலம் பயனர்கள் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் வாட்ஸ்அப்பில் இருந்தபடி வாங்கிக் கொள்ள முடியும்.

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் மற்றும் மெட்டா இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். முதல் முறையாக ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் மளிகை பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

    பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தையும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம். சமீபத்தில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமில் பொருட்களை நேரடியாக சாட் விண்டோவில் இருந்தபடி வாங்கிக் கொள்ளும் வசதியை வழங்கி இருந்தது. மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இடையேயான கூட்டணியின் அங்கமாக இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். சேவை அறிமுகம் செய்து இருப்பதோடு ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கி, இதுவரை இல்லாத வகையில் சவுகரியமானதாக மாற்ற ஜியோமார்ட் முடிவு செய்துள்ளது.

    ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்-பில் ஷாப்பிங் செய்வது எப்படி?

    வாட்ஸ்அப்-இல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய +917977079770 என்ற எண்ணிற்கு "Hi" என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்த பின் ஜியோமார்ட் பொருட்களை வாட்ஸ்அப்-இல் வாங்க துவங்கலாம். 

    • அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்குவோம்.
    • மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் 5ஜி சேவை.

    மும்பை:

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-

    ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம்.

    ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஜியோ அமைப்பின் தலைவர் ஆகாஷ் அம்பானி, இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவையை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிரிவை இயக்கி வருகிறது.
    • நாட்டின் முன்னணி பிராட்பேண்ட் சேவை நிறுவனமாகவும் ஜியோபைபர் விளங்குகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. இந்த நிறுவனம் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்க ஜியோபைபர் பெயரில் தனி பிராண்டை உருவாக்கி இருக்கிறது. நாடு முழுக்க பைபர் பிராட்பேண்ட் வழங்குவதில் ஜியோபைபர் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஜியோபைபர் நாட்டின் முன்னணி பைபர் பிராட்பேண்ட் நிறுவனமாக விளங்குகிறது.

    ஜியோபைபர் அதிவேக பிராட்பேண்ட் வழங்குவதோடு ஒடிடி பலன்கள் அடங்கிய சலுகைகள், இலவச ஜியோ செட் டாப் பாக்ஸ் என ஏராளமான சேவைகளையும் கூடுதலாக வழங்கி வருகிறது. எனினும், இவை அனைத்திற்கும் அதிவேக இணைய வசதி அவசியம் ஆகும். சிலருக்கு தங்களின் வீட்டில் அனைத்து இடங்களிலும் வைபை கவரேஜ் சிறப்பாக இருக்காது. இது போன்ற சமயத்தில் நெட்வொர்க் கனெக்டிவிட்டி மோசமாகவே இருக்கும்.


    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஜியோபைபர் புது சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு வைபை மெஷ் எக்ஸ்டெண்டர் ஆகும். இந்த எக்ஸ்டெண்டர் JCM0112 என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 மட்டுமே. இதனை மிக எளிய மாத தவணை முறை வசதியிலும் வாங்க முடியும். மாத தவணை மாதம் ரூ. 86.62 முதல் துவங்குகிறது.

    புதிய மெஷ் எக்ஸ்டெண்டரை ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது சில்லறை விற்பனை மையத்திற்கு சென்று இது பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எக்ஸ்டெண்டர் அனைத்து விதமான கனெக்டிவிட்டி பிரச்சினைகளை சரி செய்து விடும். இத்துடன் இதனை இன்ஸ்டால் செய்யும் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த சலுகை பலன்கள் கூப்பன்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 2999 சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் ரிசார்ஜ் செய்யும் போது 100 சதவீதம் கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் சலுகை ஆகஸ்ட் 9 அல்லது அதற்கு பின் ரூ. 2 ஆயிரத்து 999 விலை ரிசார்ஜ் செய்தால் பெறலாம்.

    கேஷ்பேக் தொகை நெட்மெட்ஸ், ஏஜியோ, இக்சிகோ அல்லது 75 ஜிபி 4ஜி டேட்டா வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கான ஆஃபர் கூப்பன்கள் பயனர்களின் மைஜியோ செயலியில் ரிசார்ஜ் செய்த 72 மணி நேரத்தில் கிரெடிட் செய்யப்பட்டு விடும். சுதந்திர தினத்தை ஒட்டி இந்த சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கிறது. இதில் வழங்கப்படும் வவுச்சர்களை மைஜியோ செயலியின் வவுச்சர் பகுதியில் பெற முடியும்.


    இத்துடன் 25 சதவீத தள்ளுபடி வழங்கும் மூன்று நெட்மெட்ஸ் கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன்களை ரூ. 1000 அல்லது அதற்கும் அதிக தொகைக்கு செலவிடும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கொண்டு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் நெட்மெட்ஸ் வலைதளம் மற்றும் செயலி என எதில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நெட்மெட்ஸ் கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

    இதே போன்று இக்சிகோ பயனர்கள் ரூ. 750 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களை பெற முடியும். இந்த கூப்பன்களை ரூ. 4 ஆயிரத்து 500 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட விமான புக்கிங்களின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூப்பன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். இத்துடன் ரூ. 1000 மதிப்புள்ள ஏஜியோ தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    மேலும் குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்து 990 மதிப்பிலான பொருட்களை வாங்கி இருக்க வேண்டும். அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி பெற முடியும். இந்த கூப்பன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லும். 

    • ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
    • வருகிற ஜூலை 20-ந் தேதி ரெட்மி K50i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ரெட்மி நிறுவனம் அதன் K சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி ரெட்மி K50i என்கிற மாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 20-ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 11T ப்ரோ மாடலின் ரீ பிராண்டட் வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி K50i ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. இது ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸரை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.


    அதுமட்டுமின்றி 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் என டிரிபிள் கேமரா செட் அப் உடன் இந்த ஸ்மார்ட் போன் வர உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5080 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதன் வெளியீட்டுக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், ரெட்மி K50i ஸ்மார்ட்போனில் 5ஜி சோதனை நடத்தப்படுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த 5ஜி சோதனையை நடத்தியதாகவும், இதன் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 12 5ஜி பேண்ட்களுடன் கூடிய முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த K50i மாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    வோடபோன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone



    வோடபோன் இந்தியா நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. ரூ.139 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ரூ.139 விலை சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் அழைப்புகள், தேசிய ரோமிங்கின் போது அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஜி.பி. 2ஜி/3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் கூடுதல் டேட்டாவினை எம்.பி. ஒன்றுக்கு 50 பைசா கட்டணத்தில் பயன்படுத்தலாம்.

    டேட்டா தீர்ந்ததும் அதிவேக டவுன்லோடுகளுக்கு கூடுதல் டேட்டாவினை கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம். இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படும் நிலையில், இது தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.



    இதே விலையில் வோடபோன் பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதேபோன்று 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ.129 மற்றும் ரூ.169 விலையில் வழங்கப்படுகிறது.

    வோடபோன் ரூ.129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவும் ரூ.169 சலுகையில் 1 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. சமீபத்தில் வோடபோன் ரூ.16 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இச்சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. ரூ.16 வோடபோன் சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படவில்லை.
    ×