search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியோ"

    • ஜியோ டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது
    • இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்

    பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது ரிலையன்ஸ். Paytm, போன்று 'ஜியோ' சில்லரை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

    தற்போது 'ஜியோ பே' செயலி தொழில்நுட்பம் மூலம் இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஜியோ' நிறுவனம் இதனை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளில் உடனடி பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியும்.

    மேலும் Paytm, PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 'ஜியோ' இதனை அமைத்துள்ளது. விரைவில் ஜியோ UPI செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்.

    டிஜிட்டல் வங்கித் துறையில் போட்டியை உருவாக்கும் ஜியோவின் நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய 5ஜி போன் என்ட்ரி லெவல் மாடல் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பிராசஸர் அதிக செலவின்றி முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    முன்னதாக ஜியோ பிரான்டிங்கில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போன்களுக்கு இணையான திறன் கொண்டிருக்காத காரணத்தால், அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.

    இந்த போன்களில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த போதிலும், இதில் மற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. ஜியோ 5ஜி போன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மொபைல் போன் மட்டுமின்றி, ஜியோபுக், ஜியோ டைவ், ஜியோ வைபை மெஷ் எக்ஸ்டென்டர், ஜியோ ப்ளூடூத் கேம் கண்ட்ரோலர், ஜியோஃபை, ஜியோ எக்ஸ்டென்டர், யு.எஸ்.பி. கேமரா என பல்வேறு சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    • ஜியோ புத்தாண்டு சலுகையில் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ பிரீபெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பழைய வருடாந்திர பிரீபெயிட் சலுகைகளை ஜியோ மாற்றியமைத்துள்ளது.

    இந்த அறிவிப்பு காரணமாக ஜியோ புத்தாண்டு சலுகையில் பயனர்களுக்கு 24 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையான ரூ. 2,999-இல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    அந்த வகையில், பயனர்கள் வழக்கமான 365 நாட்கள் இன்றி கூடுதலாக 24 நாட்கள் வரை நீண்ட கால சலுகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வருடாந்திர ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

    இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

    • பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
    • மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.

    ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     


    இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் அன்லிமிடெட் காலிங், 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ தொடர்ச்சியாக வருடாந்திர ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து வருகிறது. இவற்றுடன் ஒ.டி.டி. சந்தாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் புதிய ரூ. 3,227 பிரீபெயிட் சலுகையில் அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் காலிங் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை மை ஜியோ செயலி அல்லது ஜியோ வலைதளத்தில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

     

    சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையின் முன்னணி இணைய சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. சந்தையில் ஜியோ நிறுவனம் மட்டும் 52 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    ஜியோ சேவையை 442 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களும், 9.4 மில்லியன் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    • 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    • ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.

    ஜியோ நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1099 மற்றும் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு புதிய சலுகைகளும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவுடன் வழங்கப்படுகின்றன. இவற்றில் முறையே ரூ. 149 மற்றும் ரூ. 199 விலையில் கிடைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகின்றன.

    இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 5ஜி டேட்டா மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரூ. 1099 ஜியோ சலுகையுடன் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் திரைப்படங்களை 480 பிக்சல் ரெசல்யூஷனில் பார்க்க முடியும்.

     

    இந்த சலுகையில் வழங்கப்படும் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா கொண்டு ஒற்றை மொபைல் சாதனம் அதாவது ஆண்ட்ராய்டு, ஐபோன் அல்லது டேப்லெட் உள்ளிட்டவைகளில் மட்டுமே தரவுகளை பார்க்க முடியும். மற்ற பலன்களை பொருத்தவரை 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஜியோ செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் 5ஜி மொபைல் வைத்திருப்போர் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

    ஜியோ ரூ. 1499 சலுகையிலும் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் விரும்பிய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை 720 பிக்சல் தரத்தில் கண்டுகளிக்க முடியும். முந்தைய பேசிக் திட்டத்தை போன்றே இந்த சந்தாவிலும் பயனர்கள் ஒரு சமயத்தில் ஒரே சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    ஆனால், இதில் மொபைல் போன், டேப்லெட்கள், லேப்டாப் மற்றும் டி.வி. போன்ற சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் மற்ற பலன்களை பொருத்தவரை 3 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    • ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பிரீபெயிட் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஜியோவின் புதிய வருடாந்திர சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுதந்திர தினத்தை ஒட்டி புதிய வருடாந்திர ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய வருடாந்திர பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 சுதந்திர தின சிறப்பு சலுகைகளின் பலன்கள் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு அறிவிக்கப்பட்ட சலுகை பலன்களை விட வித்தியாசமாக உள்ளது. ஜியோ சுதந்திர தின சலுகையின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

     

    ரூ. 2 ஆயிரத்து 999 ஜியோ சலுகை பலன்கள்:

    ஸ்விக்கியில் ரூ. 249 மதிப்பிலான ஆர்டர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி

    யாத்ராவில் மேற்கொள்ளப்படும் விமான டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ. 1500 வரை தள்ளுபடி

    யாத்ராவில் தங்கும் விடுதி முன்பதிவுகளுக்கு 15 சதவீதம், அதிகபட்சம் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி

    ஏஜியோ தளத்தில் ரூ. 999 மதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ. 200 தள்ளுபடி

    ரூ. 999-க்கும் அதிக தொகை கொண்ட நெட்மெட்ஸ் ஆர்டர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி

    ரிலையன்ஸ் டிஜிட்டலில் தேர்வு செய்யப்பட்ட ஆடியோ பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை லேப்டாப் சீரிஸ் தான் ஜியோபுக்.
    • அளவில் சிறியதாகவும், சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்களையும் ஜியோபுக் லேப்டாப் கொண்டிருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்-இன் 2nd Gen மாடல் அறிமுகம் பற்றிய அதிகாரப்பர்வ தகவலை வெளியிட்டு உள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது முதல் குறைந்த விலை லேப்டாப் மாடலை 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. தோற்றத்தில் புதிய லேப்டாப் அதிக மாற்றங்கள் இன்றி, ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது.

    புதிய லேப்டாப் மாடலுக்காக அமேசான் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம்பெற்று இருக்கும் டீசர்களில் புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய லேப்டாப் எடை 990 கிராம் என்று தெரியவந்துள்ளது. முந்தைய ஜியோபுக் மாடலின் எடை 1.2 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    புதிய லேப்டாப் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இதில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. புதிய ஜியோபுக் மாடலில் ஜியோஒஎஸ், ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் நாள் முழுக்க பயன்படுத்துவதற்கு ஏற்ற பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஜியோபுக் மாடலின் அறிமுக விலை ரூ. 15 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இது ரிலைன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்வதற்கான விலை ஆகும். இதில் 11.6 இன்ச் டிஸ்ப்ளே, இரண்டு USB போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

     

    முந்தைய ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய 2nd Gen ஜியோபுக் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் வலைதளத்திலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஜியோ போன் 5ஜி பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது.
    • இந்த மாடலில் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஜியோ போன் 5ஜி என்று அழைக்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய ஜியோ போன் 5ஜி பற்றிய அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் மற்றும் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது.


    தோற்றத்தில் ஜியோ போன் 5ஜி மாடல் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் இதர ஸ்மார்ட்போன்களை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் பேக், நடுவே கேமரா மாட்யுல் இடம்பெற்று இருக்கிறது. முன்புறம் வாட்டர் டிராப் நகர நாட்ச் உள்ளது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஜியோ பிரான்டிங் மற்றும் 5ஜி என்று எழுதப்பட்டு உள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு புகைப்படத்தில் ஜியோ 5ஜி நெட்வொர்க்கில் டெஸ்ட் முடிவுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஜியோ போன் 5ஜி மாடலில் 470Mbps டவுன்லோடு வேகமும், 34Mbps அப்லோடு வேகமும் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஜியோ போன் 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் 5ஜி பிராசஸர் அல்லது மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்த ஜியோ போன் 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் பேக்கப் சலுகையை அறிவித்து இருக்கிறது.
    • முன்னதாக ஜியோ ஃபைபர் சேவையை பெறுவதற்கான குறைந்தபட்ச கட்டணம் மாதம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    பிராட்பேண்ட் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஜியோ நிறுவனம் ரூ. 198 விலையில் மாதாந்திர சலுகையை அறிவித்து இருக்கிறது. பிராட்பேண்ட் பேக்கப் பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் நொடிக்கு 10 மெகாபைட் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

    இதுவரை ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் இணைய மாதாந்திர கட்டணம் ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய சலுகை அறிவித்து இருப்பதோடு இணைய வேகத்தை நொடிக்கு 30 மெகாபைட் அல்லது 100 மெகாபைட் வரை உயர்த்திக் கொள்வதற்கான வசதியை வழங்குகிறது. இதற்கான கட்டணம் ஏழு நாட்களுக்கு ரூ. 21-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 152 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஃபிக்சட் லைன் பிராட்பேண்ட் சேவை பிரிவில் ஜியோ நிறுவனம் தற்போது சுமார் 84 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் 30.6 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் ரூ. 1490 கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டி இருக்கும். இதில் ஐந்து மாதத்திற்கான கட்டணம் மற்றும் இன்ஸ்டால் செய்வதற்கான கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் மொபைல் கட்டணங்களை மாற்றியமைத்தது. பிரீபெயிட் பிரிவில் துவக்க சலுகைகளின் விலையை ஏர்டெல் அதிகரித்து இருக்கிறது. போஸ்ட்பெயிட் சலுகையில் அதிக டேட்டா, அன்லிமிடெட் 5ஜி போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. 

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புதிய பேஸ் சலுகைகள் பயனர்களுக்கு ட்ரூ5ஜி டேட்டா மற்றும் இலவசமாக கூடுதல் டேட்டா வழங்குகின்றன.

    2023 ஐபிஎல் போட்டிகள் அடுத்த வாரம் துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளை பயனர்கள் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக கண்டுகளிக்க முடியும். இதையடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் பயனர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரிலையன்ஸ் ஜியோ மூன்று பிரீபெயிட் சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய ஜியோ பிரீபெயிட் சலுகைகள் அதிகபட்சமாக தினமும் 3 ஜிபி டேட்டா, அதிகபட்சம் 84 நாட்கள் வேலிடிட்டி, கூடுதலாக இலவச டேட்டா வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 999 விலைகளில் மொத்தம் மூன்று புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

     

    இவற்றின் வேலிடிட்டி முறையே 14 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. புதிய சலுகைகளில் அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளுடன் கூடுதல் டேட்டா வழங்கும் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 219 சலுகையுடன் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ. 25 வவுச்சர், ரூ. 399 சலுகையுடன் 6 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கும் ரூ. 61 வவுச்சர், ரூ. 999 சலுகையுடன் 40 ஜிபி வரையிலான டேட்டா வழங்கும் ரூ. 241 வவுச்சர் வழங்கப்படுகிறது.

    இந்த டேட்டா போதாது என்பவர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளை கிரிக்கெட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. இவற்றை நேரலையில் போட்டிகளை ஸ்டிரீம் செய்ய விரும்பும் பயனர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தலாம். கிரிக்கெட் ஆட் ஆன் சலுகைகளின் விலை ரூ. 222, ரூ. 444 மற்றும் ரூ. 667 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    இதில் ரூ. 222 சலுகையின் வேலிடிட்டி பயனர்கள் பயன்படுத்தும் பேஸ் சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது. ரூ. 444 மற்றும் ரூ. 667 விலை சலுகைகள் முறையே 60 நாட்கள் மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. டேட்டாவை பொருத்தவரை ரூ. 222 சலுகை 50 ஜிபி, ரூ. 444 மற்றும் ரூ. 667 சலுகைகள் முறையே 100 ஜிபி மற்றும் 150 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக போஸ்ட்பெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • புதிய ஜியோ போஸ்ட்பெயிட் சலுகைகளை பயனர்கள் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தி பார்க்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெயிட் சலுகைகளை- ஜியோபிளஸ் பெயரில் அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய பலன்களை வழங்குகிறது. இத்துடன் புதிய சேவையில் இணையும் பட்சத்தில் ஒருமாத காலத்திற்கு சலுகைகளை இலவசமாக பயன்படுத்தி பார்க்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ், அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டாவை வழங்குகின்றன. இந்த சலுகைகள் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா வழங்குகின்றன. ஒற்றை கட்டணத்தில் டேட்டா ஷேரிங், பிரமீயம் தரவுகளை வழங்கும் செயலிக்கான சந்தா உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது.

    ஒருவேளை இந்த பலன்கள் பிடிக்காத பட்சத்தில் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், போஸ்ட்பெயிட் இணைப்பை துண்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது பயனர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாது என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.

    ஜியோபிளஸ் போஸ்ட்பெயிட் சலுகை பலன்கள்:

    ரூ. 399 மாத கட்டணத்தில் துவங்குகிறது

    கூடுதலாக ரூ. 99 கட்டணத்தில் மூன்று இணைப்புகளை பெறும் வசதி

    4 பேர் அடங்கிய குடும்பத்திற்கு மாதம் ரூ. 696 கட்டணம்

    ஒரு சிம் இணைப்பிற்கு சராசரியாக மாத கட்டணம் ரூ. 174

    டேட்டாவை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி

    தினசரி டேட்டா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை

    ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா

    நீங்கள் விரும்பும் மொபைல் நம்பர்

    நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா சந்தா

    வெளிநாட்டு பயணங்களின் போது விமானத்தினுள் கனெக்டிவிட்டி

    சர்வதேச ரோமிங்கின் போது வைபை காலிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 1

    129 நாடுகளுக்கு ஒரு சர்வதேச ரோமிங் சலுகை

    ஜியோஃபைபர் பயனர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், மற்ற நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்கள், ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பாதுகாப்பு முன்பணம் இல்லை.

    ஒரே க்ளிக்-இல் கால்-பேக் சேவை

    டவுன்டைம் இன்றி ஜியோ நம்பருக்கு மாறும் வசதி

    ×