என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஷாக்: இலவசத்துக்கு End Card போட்ட ஜியோ ஹாட்ஸ்டார்
- இலவச சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
- புதிய ரீசாஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை பயனர்களுக்காக ஜியோ வழங்கியிருந்தது. இந்தச் சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
இதனிடையே இந்தச் சலுகையை நீட்டிப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் ஜியோ வெளியிடாததால், இன்றுடன் இச்சலுகை முடிகிறது.
ஜியோ சலுகை முடிந்த நிலையில், பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஐபிஎல் நேரலையைக் காண வேண்டுமென்றால், புதிய ரீசாஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், ரூ. 949, ரூ. 195, மற்றும் ரூ. 100 ஆகிய திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படும்.
ரூ,949 திட்டத்தில் ஐபிஎல் பார்ப்பது மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா உடன் இதில் ஹை ஸ்பீட் 4 G டேட்டா வழங்குகிறது. ஆகமொத்தம் இதில் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் ஜியோ டிவி, JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.
ரூ. 195 திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தில் 15 ஜிபி யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது. இதேபோல ரூ. 100 திட்டத்தில் 5ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் 90 நாள்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரை காணலாம்.
அதாவது, ஜியோ சிம்கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்தாலே அதனுடன் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை ஜியோ வழங்கியுள்ளது.






