search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஜியோபோன் 5ஜி இந்திய விலை இவ்வளவு தானா? இணையத்தில் லீக் ஆன தகவல்
    X

    ஜியோபோன் 5ஜி இந்திய விலை இவ்வளவு தானா? இணையத்தில் லீக் ஆன தகவல்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. முன்னதாக ஜியோ 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது ஜியோபோன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் 5ஜி மாடலின் விலையை ரூ. 8 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 12 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையை துவங்கும் முன், நாடு முழுக்க 5ஜி நெட்வொர்க் கிடைப்பதை உறுதிப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது.

    2024 வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி எம்எம்வேவ் பிளஸ் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக 2022 ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார்.

    முந்தைய தகவல்களில் ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் IPS LCD 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    Next Story
    ×