search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஜியோ லேப்டாப் - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்
    X

    ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஜியோ லேப்டாப் - இணையத்தில் லீக் ஆன சூப்பர் தகவல்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக லேப்டாப் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஏற்கனவே ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் அதிரடி சலுகைகள் வழங்கி முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்குகிறது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது பெரிய டெலிகாம் சந்தையில் ஜியோ இலவச போன் சேவை மற்றும் குறைந்த விலை 4ஜி சேவைகளை வழங்கி பிரபலம் அடைந்தது. இதைத் தொடர்ந்து 2017 வாக்கில் ஜியோவின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போனை தொடர்ந்து லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜியோ முடிவு செய்துள்ளது. பள்ளி மற்றும் அரசு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜியோவின் லேப்டாப் மாடல் ஜியோபுக் பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜியோபுக் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 4ஜி சப்போர்ட் மற்றும் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஜியோபுக் மாடல் குவால்காம் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவி உருவாக்கப்பட்ட ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது.

    தற்போது கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 100 டாலர்கள் பட்ஜெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிரிவில் ஜியோபோன் முதலிடம் பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த போன் விற்பனையில் இந்த பிரிவில் இருந்து மட்டும் ஒன்பது சதவீதமாக உள்ளன.

    ஜியோபுக் மாடலில் ஆண்ட்ராய்டு தழுவி உருவாக்கப்பட்ட ஜியோஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மைக்ரோசாப்ட் செயலிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் ARM தொழில்நுட்பத்தில் உருவான குவால்காம் பிராசஸர் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 665 வழங்கப்படும் என தெரிகிறது. இந்த லேப்டாப் ஏசர், லெனோவோ மற்றும் லாவா நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் விண்டோஸ் ஒஎஸ் கொண்ட லேப்டாப்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், தான் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு ஒஎஸ் தழுவிய ஜியோஒஎஸ் கொண்ட ஜியோபுக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் பல லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×