search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Invitation"

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே மாதம் 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ரூ.12 கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இங்கு லிங்கம் , மூர்த்தம் சங்கமம், ஆகிய மூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள் புரிந்து வருகிறார்.

    கோயிலில் மலை மீது உமா மகேஸ்வரர், சட்டைநாதர் சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

    இக்கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 1991 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    இதற்கான ரூ.12கோடியில் திருப்பணிகள் முழுமையாக நடைபெற்று நிறைவுபெறும் தருவாயில் உள்ளது.

    இதனிடையே கோயில் கும்ப்பாபிஷேக பத்திரிக்கை அச்சிட்டு அதனை பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, திருநிலைநாயகிஅம்மன், சட்டநாதர் சுவாமி உள்ளிட்ட சுவாமி சன்னதிகளில் வைத்து வழிபாடு செய்து படைக்கப்பட்டது.

    அதன்பின்னர் கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிட அதனை திருப்பணி உபயதாரரும், சீர்காழி தமிழ்சங்க தலைவருமான இ.மார்கோனி பெற்றுக்கொ ண்டார்.

    அருகில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
    • அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர வேண்டும் என கூறி இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

    • இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.
    • நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான ஜெர்மனி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரகங்கள் இறக்குமதியாளராக உள்ளது. அந்நாட்டின் மொத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடைகளின் பங்களிப்பு 3 முதல் 4சதவீதத்துக்கும் குறையாமல் தொடர்கிறது.கடந்த 2019ல் ரூ. 2.92 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ஆயத்த ஆடைகள் ஜெர்மனியில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு கடந்த 2021ல், 3.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஜெர்மனிக்கான இந்திய ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருகிற நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை ஏ.இ.பி.சி., செய்துள்ளது.ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவது குறித்து ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.aepcindia.com என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக விடுதி தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகள் விடுதிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக தொடங்க உள்ள விடுதி மற்றும் செயல்பாட்டில் உள்ள மகளிா் தங்கும் விடுதி, குழந்தைகளுக்கான விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கருத்துருக்களை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அல்லது 88388 72443, 75020 34646 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

    ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் ஒதுக்கீடு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட திறன் அலுவலகம் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையம் உள்ளது. தனியார் கணினி மையம் மூலமும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055879, 9499055880 என்ற தொலைபேசி எண்கள் மூலமும், அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் விருதுபெற தொண்டுநிறுவனங்களுக்கு அழைப்பு
    • 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னனேற்றத்துக்காக சேவைப் புரிந்தோர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழக முதல்வர், சுதந்திரதினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்தோர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்க உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்களில் கீழ்காணும் தகுதியுடையவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுன்றன.

    சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களுடன் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் நகலினை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 20இல் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை 04329 228516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளார்.

    பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் காண்போர் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. #AkashAmbaniMarriage #Invitation
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.

    பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.



    அழகிய சிவப்பு நிற பெட்டகம் ஒன்றின், மேல்பகுதியில் சூரிய உதயத்தில் பறவைகள் பறக்க , மயில்கள் நடனமாட, மலர்கள் பூத்துக்குலுங்கும் வனத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் ராதா கிருஷ்ணர் இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டகத்தின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்த பெட்டகத்தினை திறந்த பின்னர் சிறு சிறு பகுதிகளாக மேலும் ஒரு ராதா கிருஷ்ணர் படம் வெள்ளியினால் ஆன ஃப்ரேம் போடப்பட்டுள்ளது. அதனையடுத்து ஆரஞ்சு நிறத்தில் கார்டு ஒன்று மணமக்களுக்கான வாழ்த்துச் செய்தியுடன் இருக்கிறது. இதில் ‘சூரிய தேவனே, நீயே எங்கள் ஆகாஷின் ஒளி, எங்கள் ஒவ்வொரு ஷ்லோகாவிற்குள்ளும் நீங்களே பிரகாசிக்கிறீர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கு அடுத்து ராஜ அலங்காரத்தில் இருக்கும் விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக மணமக்கள் பெயர் தாங்கிய கார்டு ஒன்று, முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் அழைப்பு கடிதத்துடன் சேர்ந்து  உள்ளது.

    ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம், மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AkashAmbaniMarriage #Invitation
    முத்துப்பேட்டை அருகே மழை வேண்டி அழைப்பிதழ் அச்சடித்து மரங்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மரங்கள் பட்டுபோனதால் திருமணம் நிறுத்தப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு வள்ளிக்குளக்கரை பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே வேம்பு மற்றும் அரச மரங்கள் நடப்பட்டு வளர்த்து வந்தனர். இந்த வேம்பு-அரச மரத்துக்கு “திருக்கல்யாணம்” நடத்தினால் மழைபெய்யும் என்று கிராமமக்கள் கருதினர்.

    இதனையடுத்து மரங்களின் திருமணத்துக்கு போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்பிதழ் அச்சிட்டப்பட்டு வீடுவீடாக விநியோகிக்கப்பட்டது. வரும் 11-ம்தேதி காலை 9மணியிலிருந்து 10.30-க்குள் திருமணம் நடத்த இருந்த நிலையில் அந்த மரத்திலிருந்து சில நாட்களாக இலைகள் உதிர ஆரம்பித்தன. வெயில் தாக்கத்தால் இலைகள் உதிர்கின்றன. விரைவில் மரம் துளிர் விடுமென அப்பகுதியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலைகளும் உதிர்ந்த பிறகும் மரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி பட்டுப்போன மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்த முடியாது. அதனால் திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று தீர்மானித்தனர்.

    பட்டுப்போன வேம்பு-அரச மரங்களின் அடியில் ஆலோசனை கூட்டம் நடத்திய பக்தர்கள்.

    இதுகுறித்து திருமண ஏற்பாட்டாளர் முத்துசாமி, கிராம முக்கிய பிரமுகர்கள் சிங்கரவேல், அர்ச்சுனன், பக்கிரிசாமி, முருகேசன், சுப்பிரமணியன், வீரப்பாண்டியன், பூபாலன் ஆகியோர் கூறுகையில் சுமார் 58 ஆண்டுகள் பழமையானது. இந்த வேம்பு-அரச மரங்களுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். ஒருசேர 2 மரமும் பட்டுப்போய் விட்டன. இது எப்படி நடந்தது என்று புரியவில்லை. எனவே திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
    ×