என் மலர்
நீங்கள் தேடியது "AkashAmbani"
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கோலாகலமாக துவங்கியது. #AkashAmbaniMarriage # PreWedding Celebrations
புதுடெல்லி:

அடுத்த மாதம் நடைபெறும் திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்தும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. #AkashAmbaniMarriage # PreWedding Celebrations
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதியர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ கண்களை கவரும் வகையில் இருந்தன. இவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், முகேஷ் அம்பானியின் அண்டிலா இல்லத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின.

பாடகி பல்குனி பதாக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடல் பாடல் என அனைத்து விதமான கொண்டாட்டங்களுடன் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் களைகட்டி உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி, அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, முகேஷ் அம்பானியின் தாயார் கேகிலபென் அம்பானி, உட்பட உறவினர்கள், நண்பர்கள் என குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அடுத்த மாதம் நடைபெறும் திருமண விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்தும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. #AkashAmbaniMarriage # PreWedding Celebrations
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் காண்போர் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. #AkashAmbaniMarriage #Invitation
புதுடெல்லி:
பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அழகிய சிவப்பு நிற பெட்டகம் ஒன்றின், மேல்பகுதியில் சூரிய உதயத்தில் பறவைகள் பறக்க , மயில்கள் நடனமாட, மலர்கள் பூத்துக்குலுங்கும் வனத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் ராதா கிருஷ்ணர் இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டகத்தின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டகத்தினை திறந்த பின்னர் சிறு சிறு பகுதிகளாக மேலும் ஒரு ராதா கிருஷ்ணர் படம் வெள்ளியினால் ஆன ஃப்ரேம் போடப்பட்டுள்ளது. அதனையடுத்து ஆரஞ்சு நிறத்தில் கார்டு ஒன்று மணமக்களுக்கான வாழ்த்துச் செய்தியுடன் இருக்கிறது. இதில் ‘சூரிய தேவனே, நீயே எங்கள் ஆகாஷின் ஒளி, எங்கள் ஒவ்வொரு ஷ்லோகாவிற்குள்ளும் நீங்களே பிரகாசிக்கிறீர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து ராஜ அலங்காரத்தில் இருக்கும் விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக மணமக்கள் பெயர் தாங்கிய கார்டு ஒன்று, முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் அழைப்பு கடிதத்துடன் சேர்ந்து உள்ளது.
ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம், மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AkashAmbaniMarriage #Invitation
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.
பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.