search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெர்மனி வர்த்தகர்களுடன் சந்திப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு
    X

    கோப்புபடம்.

    ஜெர்மனி வர்த்தகர்களுடன் சந்திப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

    • இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.
    • நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான ஜெர்மனி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரகங்கள் இறக்குமதியாளராக உள்ளது. அந்நாட்டின் மொத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடைகளின் பங்களிப்பு 3 முதல் 4சதவீதத்துக்கும் குறையாமல் தொடர்கிறது.கடந்த 2019ல் ரூ. 2.92 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ஆயத்த ஆடைகள் ஜெர்மனியில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு கடந்த 2021ல், 3.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஜெர்மனிக்கான இந்திய ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருகிற நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை ஏ.இ.பி.சி., செய்துள்ளது.ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவது குறித்து ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.aepcindia.com என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×