search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inquiry"

    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்
    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள வாலிபால் விளையாடும் மைதானத்தில் உள்ள வாலிபால் போஸ்டரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியடி உயிரிழந்த நிலையில் இருந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரியதர்ஷினி விசாரணை செய்தார். அப்போது தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை எடுக்க விடாமல் முற்றுகை யிட்டனர். இவரை அடித்து கொலை செய்து யாரோ தூக்கில் மாட்டி இருக்கி றார்கள் எனவும், இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு இணங்கிய பொதுமக்கள் உடலை எடுக்க விட்டனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியவர் தண்டவாளத்தில் விழுந்து பலியானார்.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 58). இவர் செங்க ல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை அடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டு கம்பெனியில் இருந்து விடைபெற்றார். செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் பஸ்சில் வந்த அவர், திண்டிவனம் ெரயில் நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான விழுப்புரம் சொல்வதற்கு பேசஞ்சர் ெரயிலில் சென்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது திண்டிவனத்தில் இருந்து புறப்பட்ட ெரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரது செல்போன் பிளாட்பார்மில் கீழே விழுந்தது. பிளாட்பார்மில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக ஓடும் ெரயிலில் இருந்து கீழே இறங்கிய போது, நிலை தடுமாறிய சுதாகர், தவறி விழுந்தார். இதில் பிளாட்பாரத்தில் இருந்து கீழே விழுந்து ரெயிலின் அடியில் சிக்கி கால் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு ெரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காடாம்புலியூரில் அனுமதி இன்றி கள் இறக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் வேலன் குப்பம் பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த விக்ரம் (22) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக விக்ரமை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
    • ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி.

    இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார்.

    இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் பட்டில் கேட்டன் பலிராம், ஏக்தாபக்வித்தா, மோனியா உப்பல், சந்தோஷ் குமார், பிஜூவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று விக்கிரவாண்டி வந்தனர்.

    அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    இந்நிலையில் இன்று காலை தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு உறுப்பினர்கள் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூர் சென்றனர். அங்கு ஆசிரமத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி காந்தன் (வயது 38) வியாபாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றார்.

    இந்த நிலையில் கோவிலில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அய்யனார். இவர், ஒரு மாற்றுத்திறனாளி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பிர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துஇருந்தார்
    • அதில் அதே ஊரை சேர்ந்த கிராம நிர்வாகஅதிகாரியின் உதவியாளர் ஒருவர் தன்னை தாக்கி தனது குடும்பத்தைபற்றி அவதூறு பேசி வருவதாகபுகார்தெரிவித்திருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை அடுத்த பெரிய கள்ளிப்பட்டை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அய்யனார். இவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பண்ருட்டி டி.எஸ்.பிர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துஇருந்தார். அதில் அதே ஊரை சேர்ந்த கிராம நிர்வாகஅதிகாரியின் உதவியாளர் ஒருவர் தன்னை தாக்கி தனது குடும்பத்தைபற்றி அவதூறு பேசி வருவதாகபுகார்தெரிவித்து இருந்தார். இதுசம்பந்தமாக பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லாசம்பவ இடத்தை நேரில் சென்று விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார் .

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.

    • மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை மருத்துவமனையில் சேர்த்தனர்
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீரசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன். அவரது மனைவி மகேஷ்வரி (வயது 35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. நேற்று மகேஷ்வரி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் மகேஷ்வரியை தூக்கிக்கொண்டு சிதம்பரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாகன சோதனை, மோட்டார் சைக்கிள் திருட்டு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கள்ளக்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 22) என்பதும், மேலும் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதே போல் கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் பகுதியில் மேலும் 2 வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கோகுலை கைது செய்தனர்.

    இவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக ராஜேஸ்வரி பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ராஜாமணி (வயது 65 ). இவர்நேற்று காலை அய்யனார் கோவில்தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லைஅதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ராஜாமணியை பல்வேறு இடங்களில் ேதடினர்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராஜேஸ்வரி புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து ராஜாமணி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்
    • சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோட்டை அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (29). இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இரவு பகண்டை சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார்.
    • இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. முஸ்லிம்களின் முக்கிய வழிபாட்டு தளமாக கருதப்படும் நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த சேக்நூர்தீன் (வயது 34) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று கந்தூரி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று இரவு நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் எடையூர் அடுத்த பின்னத்தூரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளிவந்தது. உடனே காரை நிறுத்தி விட்டு அனைவரும் வெளியேறினர்.

    இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட அனைவரும் எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார்.
    • இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி சொர்ணாவூர் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்கிற மனைவி, ஒரு மகன் உள்ளனர் சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார். அப்போது சந்தத்தோப்பு திடலில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அய்யப்பன் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×