என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ
  X

  நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்.

  சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் 'தீ'

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார்.
  • இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  திருத்துறைப்பூண்டி:

  நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. முஸ்லிம்களின் முக்கிய வழிபாட்டு தளமாக கருதப்படும் நாகூர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்த சேக்நூர்தீன் (வயது 34) என்பவர் தனது குடும்பத்துடன் காரில் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று கந்தூரி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று இரவு நாகூரில் இருந்து காரில் தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு செல்ல புறப்பட்டார். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் எடையூர் அடுத்த பின்னத்தூரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளிவந்தது. உடனே காரை நிறுத்தி விட்டு அனைவரும் வெளியேறினர்.

  இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட அனைவரும் எந்தவித தீக்காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×