search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் காய்ச்சியவர்"

    • தும்பல் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்குட்டி மடுவு வனப்பகுதியில் வனவர் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குதி மடுவு அருகே பிளாஸ்டிக் பேரல்களில் ஊறல் போட்டு வைத்திருந்த ஒருவர், சாராயம் காய்ச்சி விற்பனைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தும்பல் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்குட்டி மடுவு வனப்பகுதியில் வனவர் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது குதி மடுவு அருகே பிளாஸ்டிக் பேரல்களில் ஊறல் போட்டு வைத்திருந்த ஒருவர், சாராயம் காய்ச்சி விற்பனைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் சின்ன குட்டி மாடு கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் (37) என்பதும், பிளாஸ்டிக் கேனில் அடைத்து 15 லிட்டர் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது. வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய செல்லப்பனை, தும்பல் வனத்துறையினர், 15 லிட்டர் சாராயத்துடன் வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாழப்பாடி போலீசார் செல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்
    • சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டு ரோட்டை அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (29). இவர் தனக்கு சொந்தமான முள்தோப்பில் 2 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் சாராய ஊரல் காய்ச்சினார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இரவு பகண்டை சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சாராயம் காய்ச்சிய அந்தோணி ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×