என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான மோட்டார் சைக்கிள் கொள்ளையன் மற்றும் அவரை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
கள்ளக்குறிச்சியில் அதிரடி மோட்டார் சைக்கிள்கொள்ளையன் கைது
வாகன சோதனை, மோட்டார் சைக்கிள் திருட்டு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கள்ளக்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 22) என்பதும், மேலும் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. இதே போல் கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் பகுதியில் மேலும் 2 வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் கோகுலை கைது செய்தனர்.
Next Story






